ஜோக்ஸ்





‘‘அந்த சைக்கிள் கடைக்காரர் சரியான ஏமாற்றுப் பேர்வழின்னு சொல்றீயே... ஏன்?’’
‘‘இங்கு சங்கு சக்கரம் நல்ல முறையில் பஞ்சர் பார்க்கப்படும்னு போர்டு போட்டிருக்காரே..!’’

‘‘எதுக்காக ‘ஊசி’ வெடியை மட்டும் தீபாவளி வர்றதுக்கு முன்னாடியே வெடிக்கிறீங்க..?’’
‘‘இது ‘தடுப்பு ஊசி’ வெடிங்க...’’

‘‘ஏன் கபாலி... இந்த தீபாவளிக்கு நீ உன் மாமனார் வீட்டுலயே
திருடறதுக்கு பிளான் பண்ணியிருக்கியாமே?’’
‘‘ஆமா ஏட்டய்யா! இது எனக்கு ‘தல திருட்டு’...’’

‘‘தலைவர் ஏன் அப்செட்டா இருக்கார்..?’’
‘‘எதிர்க்கட்சியையே உடைச்ச அவரால, அவரோட மனைவி செஞ்ச மைசூர்பாகை உடைக்க முடியலையாம்..!’’


‘‘வெடி தனியா, திரி தனியா தர்றீங்களே... இது என்ன புது வெடியா?’’
‘‘ஆமா... இது வாஸ்து வெடி. வாஸ்துப்படி வெடியில திரி இருக்கக் கூடாதாம்!’’

‘‘என்ன டாக்டர் இது... மருந்துச்சீட்டுல புஸ்வாணம், சரவெடி, சாட்டைன்னு எழுதித் தர்றீங்க?’’
‘‘தீபாவளி நேரமாச்சே, எங்க மெடிக்கல் ஷாப்புல அப்படியே
பட்டாசும் விற்கிறோம்!’’

‘‘தலைவர் கன்னாபின்னான்னு உளர்றாரா..?’’
‘‘ஆமா... ‘ஒரு தடவை நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது’ங்கிறார்!’’