கர்ணனின் கவசம்





‘‘வணக்கம் ஆயி... தப்பு தப்பு... பூலோக ஆயின்னுதான் சொல்லணும் இல்லையா? ம்ஹும். அப்படியும் சொல்லக் கூடாது. அப்ப எதுதான் சரி..? கரெக்ட்... எக்ஸ் பூலோக ஆயிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்...’’

கிண்டலுடன் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று பார்க்காமலேயே புரிந்தது. நிதானமாகத் திரும்பினாள் ஆயி.
‘‘எப்படி இருக்க?’’ - இமய
மலையின் பனியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி சாதாரண வேட்டி சட்டையுடன் நின்றிருந்த பரமேஸ்வர பெருந்தச்சனைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘பார்த்தாலே தெரியலையா? பரம சௌக்கியமா இருக்கேன்...’’
‘‘பீஷ்மர்கிட்டேந்து பிரும்மாஸ்திரத்தை வாங்க முடியாம போன பிறகுமா..?’’
‘‘ஆமா. அதை நம்பியா நாங்க இருக்கோம்?’’
‘‘நாங்க?’’
‘‘ஆமா... பன்மைதான்...’’
‘‘பரவாயில்லையே... ஐக்கிய முன்னணி எல்லாம் அமைச்சிட்ட?’’
‘‘பழிவாங்கணும்னு முடிவு செய்துட்ட பிறகு ஒரே அலை
வரிசைல இருக்கிறவங்களோட கை கோக்கறதுதானே தர்மம்?’’
‘‘தர்மம்?’’ பற்களைக் கடித்த ஆயி, சீற்றத்துடன் பரமேஸ்வர பெருந்தச்சனைப் பார்த்தாள். ‘‘அறத்தைப் பத்தி நீ பேசறியா?’’
‘‘தப்புதான். தர்மத்தைவிட்டு நீ விலகின பிறகு நான் மட்டுமே அறத்துக்காக போராடிக்கிட்டு இருக்கேன் பாரு... அது மன்னிக்க முடியாத குற்றம்தான்...’’
‘‘பரமேஸ்வரா...’’
‘‘உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது அம்பா...’’
‘‘அந்தப் பேரை உச்சரிக்காத...’’
‘‘ஏன் பழசெல்லாம் நினைவுக்கு வருதா?’’ - கடகடவென்று சிரித்த பரமேஸ்வர பெருந்தச்சன், ‘‘அப்ப வியாச பாரதத்துல நச்சுனு உட்கார்ந்திருக்கே ‘ஆதி பர்வம்...’ அதையும் மாத்திடலாமா?’’ என்றார்.
பதில் பேசாமல் மவுனமாக நின்றாள் ஆயி.
‘‘நீ காசி மகாராஜாவோட மகள். உன்னோட சுயம்வரத்துக்கு வந்த பீஷ்மன், உன்னையும் உன் சகோதரிகளையும் தூக்கிட்டுப் போனான். எதுக்கு? தன்னோட சித்தி பசங்களுக்கு கட்டி வைக்க...’’
‘‘பரமேஸ்வரா...’’
‘‘சல்வானு கூப்பிடு...’’
அவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஆயி.
‘‘சவுபா நாட்டோட அரசனான நானும் நீயும் காதலிச்சோம். சுயம்வரத்துல நாம மணமுடிக்க இருந்தோம். நம்ம சந்தோஷத்தைக் கெடுத்தவன் அந்த பீஷ்மன்... அதையெல்லாம் மறந்துட்டியா?’’
‘‘அதை மட்டுமில்ல... அஸ்தினாபுரம் சபைல நம்ம காதலைச் சொல்லிட்டு திரும்பி வந்த என்னை நீ கழுத்தைப் பிடிச்சு வெளியேத்தினதையும் மறக்கல....’’
‘‘அம்பா...’’
‘‘ஆயின்னு கூப்பிடு. பீஷ்மரை பழிவாங்க சபதம் செஞ்சேன்... அதனாலேயே சிகண்டியா மறுஜென்மம் எடுத்து குருக்ஷேத்திரப் போர்ல அவரை நேருக்கு நேர் சந்திச்சேன்... இந்தப் பிறவியிலயும் ஆயியா

நடமாடிட்டு இருக்கேன்... என்னோட குறிக்கோள் ஒண்ணே ஒண்ணுதான். அது பீஷ்மரை வீழ்த்தறது. தன்னோட அஸ்தி, கங்கைல கரைக்கப்பட அவர் விரும்பல... ஏன்னா, கங்காதேவிதான் அவரோட

அம்மா. அதனாலதான் மறைஞ்சு போன சரஸ்வதி நதியைத் தேடிட்டு இருக்காரு. அந்த ஆறு பாயற இடம் தெரிஞ்சதுமே அவரோட உயிர் பிரிஞ்சுடும். அதுவரைக்கும் என்னோட பிறவிகளும் இந்த

பூலோகத்துலதான். இப்படி தர்மத்துக்கு கட்டுப்பட்டு வாழற என்கிட்ட அதர்மம் பக்கம் நிக்கிற நீ, அறத்தை உபதேசிக்கிறியா?’’
‘‘ஆயி...’’
‘‘சகோதர முறைலயும் சரி, இந்திரனுக்கு தானமா கொடுக்கப்பட்ட வகைலயும் சரி கர்ணனோட கவசம் பாண்டவர்களுக்குத்தான் சொந்தம். அதை கவுரவர்களுக்கும் வெளிநாட்டுக்காரங்களுக்கும் தாரை

வார்க்க நினைக்கிற நீயெல்லாம் ஒரு மனுஷன்... சீ... உன்னை காதலிச்சதை நினைச்சு நான் வெட்கப்
படறேன்...’’
‘‘வேதனையும் படறேன்னு சொல்லேன்...’’
‘‘இந்த வார்த்தை ஜாலத்துல ஒண்ணும் குறைச்சலில்ல...’’
‘‘வெறும் வார்த்தைகள்லதான் அம்பா நான் ஜாலத்தை காட்டறேன்... உன்னை மாதிரி சரஸ்வதி நதி எங்க பாயுதுன்னு தெரிஞ்சும் ஒன்பது பேரை அலைய வைக்கிறதில்ல...’’
‘‘அதுக்கான காரணம் உனக்குப் புரியாது...’’
‘‘அவசியமேயில்ல அம்பா... முப்பெரும் தேவிகளா பூலோகத்துல நீயும், திரிசங்கு சொர்க்கத்துல குந்தியும், கபாடபுரத்துல திரவுபதியுமா ஆயி நாற்காலில உட்கார்ந்துகிட்டு கர்ணனோட கவசத்தை

பாதுகாத்துட்டு இருக்கீங்களே... அதுக்கெல்லாம் முடிவு வந்தாச்சு. இந்தமுறை அந்த கவசத்தை நாங்கதான் கைப்பற்றப் போறோம்...’’
‘‘கனவுல கூட இது நடக்காது பரமேஸ்வரா...’’
‘‘அப்படியே நினைச்சுட்டு இரு... கபாடபுரத்துக்கு நீ அனுப்பின ஒன்பது பேரும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப் போறாங்க... அதைத் தடுக்க உன்னால மட்டுமில்ல... கபாடபுர ஆயியாலயும் முடியாது...’’
‘‘இது அரக்கு மாளிகை. அது தெரியாம இருக்க பொன்முலாம் பூசியிருக்காங்க...’’ தன்னைச் சுற்றிலும் குனிந்திருந்த எட்டு பேருக்கும் கேட்கும் வகையில் பேசினான் குள்ள
மனிதன்.
‘‘இவன் சொல்றது உண்மைதான்...’’ என்று பதிலளித்த மத்திம மனிதன் ‘‘இந்த மாளிகைக்கு யாரோ தீ வைச்சிருக்காங்க...’’ என்றபடி மூச்சை இழுத்துப் பிடித்தான்.
நெருப்பின் வாசனையை மற்றவர்களும் நுகர்ந்தார்கள்.
‘‘யார் இந்த வேலையை செஞ்சது?’’ என்று திமிறிய உயரமான மனிதனை இழுத்துப் பிடித்தான் குள்ள மனிதன்.
‘‘வேற யாரு? நண்பர்கள் போர்வைல வந்திருக்கிற
எதிரிங்கதான்...’’
‘‘அவங்கள ஒரு கை பார்க்காம விடக் கூடாது...’’ மத்திம மனிதன் முஷ்டியை மடக்கினான்.
‘‘ஷ்... அமைதியா இருங்க...’’ என்று அடக்கிய குள்ள மனிதன் அழுத்தம்திருத்தமாகச் சொன்னான். ‘‘மகாபாரதம் திரும்புது. பாண்டவர்கள அழிக்க கவுரவர்கள் இதே மாதிரிதான் ஏற்பாடு செஞ்சாங்க. அப்ப

விதுரர் ஒரேயொரு வாக்கியம்தான் சொன்னாரு. ‘காடு தீப்பற்றி எரியும்போது எலிகள் பூமிக்குள் இருக்கும் வளையில் புகுந்துவிடும்...’’’
‘‘அதுமாதிரி இப்ப நாம தப்பிக்கணும்னு சொல்றியா?’’
‘‘ஆமா. கோபம் வர்றது இயற்கை. ஆனா, எதுக்காக கோபப்படறோம், யாரை நோக்கி ஆவேசப்படறோம், அந்த கோபத்தை எப்ப எந்த இடத்துல வெளிப்படுத்தப் போறோம்ங்கறது எல்லாத்தையும் விட

முக்கியம். ஏன்னா ஆவேசத்தை வெளிப்படுத்தற இடம்தான் வெற்றியை தீர்மானிக்கும். இப்ப இந்த இடத்துல நாம சிங்கமோ, புலியோ, சிறுத்தையோ இல்ல. எலி...’’ என்ற குள்ள மனிதன் அதன் பிறகு

தாமதிக்கவில்லை. சிற்ப சாஸ்திர அடிப்படையில் கபாடபுரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த மாளிகையில் நிச்சயம் சுரங்கம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். எதிர்பார்த்தது போலவே யாளி

சிற்பம், சுரங்கத்தின் வாயிலாக இருந்தது.
யாளியின் அகன்ற வாய்க்குள் கையை நுழைத்து தென்பட்ட பொறியைத் திருகினான். தரை பிளந்து வழிவிட்டது. மடமடவென்று ஒன்பது பேரும் இறங்கினார்கள்.
கடைசியாக இறங்கிய நபர் ஏழாவது படிக்கட்டில் கால் வைக்கவும் சுரங்கம் மூடவும் சரியாக இருந்தது. கூடவே பரவி வந்த தீயும் மாளிகையை முற்றிலுமாக விழுங்க ஆரம்பித்தது. அந்த உஷ்ணத்தை

சுரங்கத்தில் இருந்தவர்களால் உணர முடிந்தது.
‘‘கடலுக்குள்ள நெருப்பு...’’ என்று முணுமுணுத்தபடியே படிக்கட்டு முடிந்து ஆரம்பமான தாழ்வாரத்தில் அடியெடுத்து வைத்தான் மத்திம மனிதன். அது அகலமான தாழ்வாரம். அதன் மறுமுனை

ஒற்றையடிப் பாதை போல் நீண்டிருந்தது. ‘‘அதுவழியாதான் போகணும்னு நினைக்கறேன்...’’ என்றபடி அங்கு சென்றவன் திகைத்து நின்றான். அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் தங்கள் முன்னால்

விரிந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தார்கள்.
காரணம், நீளமான அந்த ஒற்றையடிப் பாதை, கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. இருளில் ஒளிர்ந்த கடலின் ஆழமும், சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்த சுறாமீன்களும் துல்லியமாகத் தெரிந்தன.

பாதையில் நடப்பவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
தங்கள் அருகில் இருந்த விளக்கை தொட்டுப் பார்க்க தன் கைகளை நீட்டினான் உயரமான மனிதன்.
‘‘தொடாத...’’ என்று தடுத்தான் குள்ள மனிதன்.
‘‘ஏன்?’’
‘‘அது விளக்கில்ல...’’
‘‘என்ன சொல்ற?’’
‘‘உண்மையைச் சொல்றேன். நம்ம கண் முன்னாடி விரிஞ்சிருக்கிற இந்தப் பாதையும் நிஜமானதில்ல...’’
‘‘அப்படீன்னா?’’
‘‘மாயா லோகம்...’’
‘‘என்னது?’’
‘‘ராஜசூய யாகம் செய்ய பாண்டவர்கள் முயன்றப்ப ஒரு மாளிகையைக் கட்ட தர்மர் நினைச்சாரு. இதுக்காக தேவர்களோட கட்டிடக்கலை வல்லுனரான மயனை அவர் கூப்பிடல. பதிலா மாயாவை

நியமிச்சார். இந்த மாயா, அசுரர்களோட கட்டிடக் கலைஞர். அப்படி கட்டப்பட்ட மாய மாளிகைக்கு வந்த துரியோதனன் தண்ணீர் தொட்டின்னு நினைச்சு சாதாரண தரையைத் தொட்டு ஏமாந்தான். சாதாரண

தரைன்னு நினைச்சு நீர்த் தொட்டில விழுந்தான். கதவுன்னு நினைச்சு சுவர்ல முட்டிகிட்டான். சுவர்னு நினைச்சு கதவைத் திறந்தான். இதைப் பார்த்துட்டு திரவுபதி சிரிச்சாங்க. அந்த அவமானம்

தாங்காமத்தான் பாஞ்சாலியை துகிலுரிக்க துரியோதனன் முடிவு செஞ்சான்...’’
‘‘அதுமாதிரி இந்த சுரங்க வழின்னு சொல்றியா?’’ புருவத்தை உயர்த்தினான் மத்திம மனிதன்.
‘‘ஆமா...’’
‘‘அப்ப சரியான வழிய எப்படி கண்டுபிடிக்கிறது?’’
‘‘சாவிய வைச்சுத்தான்...’’
‘‘கொஞ்சம் புரியும்படியா சொல்லு...’’
‘‘தெளிவாவே சொல்றேன். முழுக்க முழுக்க கணித சூத்திரத்தால கட்டப்பட்டதுதான் மாய மாளிகை. அதனால சரியான ஃபார்முலா தெரிஞ்சவங்களாலதான் நடமாட முடியும். ஒரேயொரு உதாரணம்

சொல்றேன். ஒரு ராணுவ முகாமுக்குள்ள தினமும் பணியாளர்கள் நுழையணும். ஆனா, வாசல்ல கெடுபிடி அதிகம். ஐடி கார்ட், கைரேகை, டிஎன்ஏ... இதெல்லாம் பத்தாது. வாசல்ல நிக்கறவன் ஒவ்வொரு

நாளும் ஒவ்வொரு கேள்வியை நுழையறவங்ககிட்ட கேட்பான். அப்படி ஒருநாள் அவன் கேட்ட கேள்வி, ‘12’. அதுக்கு முதல்ல வந்தவன் சொன்ன பதில், ‘6’. அவனை உள்ள அனுப்பிட்டு இரண்டாவது

ஆளைப் பார்த்து ‘10’னு சொன்னான். முதல் ஆள் சொன்னதை வைச்சு இந்த இரண்டாவது ஆள் ‘5’னு பதில் சொன்னா இவனை உள்ள விட மாட்டான். ஏன் சொல்லுங்க?’’
எட்டு பேரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
குள்ள மனிதன், தானே பதில் சொல்ல ஆரம்பித்தான். ‘‘சங்கேத சொற்களை கணித சூத்திரத்தாலதான் உடைக்க முடியும். ‘12’. இதை ஆங்கிலத்துல எழுதினா ‘ஜிஷ்மீறீஸ்மீ’. இதுல ஆறு ஆங்கில எழுத்து

இருக்கு. அப்ப இதுல சரிபாதி   ‘ஷிவீஜ்  ’. மூன்றெழுத்து. சரியா? இப்ப இரண்டாவது ஆள்கிட்ட கேட்ட கேள்வி, ‘10’.   ‘ஜிமீஸீ’.   இதுக்கான பதில் ‘5’ இல்ல. ‘3’. அதாவது   ‘ஜிலீக்ஷீமீமீ’ .

ஐந்தெழுத்து...’’
‘‘புரியல...’’
‘‘இங்க நம்பர்ஸ் முக்கியமில்ல. எழுத்துத்தான் அடிப்படை. அதனால நிஜ வாழ்க்கையோட கணித ஃபார்முலா இங்க சரிப்பட்டு வராது. நான் லீனியரா யோசிச்சாத்தான் இந்த இல்யூஷனோட சூத்திரத்தை

உடைக்க முடியும்...’’
‘‘அந்த வழிமுறை உனக்குத் தெரியுமா?’’
‘‘எனக்கு மட்டுமில்ல... இந்த உலகத்துல யாருக்குமே தெரியாது...’’
‘‘வந்த வழியே திரும்பிடலாம்...’’
‘‘அதுவும் முடியாது. நாம சுழல்ல மாட்டிகிட்டோம்.
ஃபார்முலாவை பிரேக் பண்ணாம நகர முடியாது...’’
‘‘அப்ப தப்பிக்க வழி?’’
‘‘காமதேனுவோட பாலை தரைல தெளிச்சாதான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்...’’
‘‘அந்தப் பால்?’’
‘‘நம்ப நண்பர்கள்கிட்ட இருக்கு... அவங்க யாரு, எங்க இருக்காங்கனு தெரியல...’’ என்று குள்ள மனிதன் சொல்லவும் அவர்கள் ஒன்பது பேரையும் விழுங்குவதற்காக நெருப்புப் பந்து ஒன்று வரவும்

சரியாக இருந்தது.
அதே நேரம்...
‘‘மிஸஸ் ராஜி ரவிதாசன்...’’ என்று சிரித்தபடி தன் பெயரைச் சொன்னவளின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்த ஆதித்யா, ‘‘தாயே... உங்களுக்காகத்தான் இதைக் கொண்டு வந்திருக்கேன்...’’ என்றபடி

காமதேனுவின் பாலை அவளிடம் கொடுத்தான்.
(தொடரும்)

‘‘அவரை போலி டாக்டர்னு ஏன் சொல்றே..?’’
‘‘வெடி வெடிச்சு காயமாகிடுச்சுன்னு சொன்னா, பட்டாசு மருந்தைத் தடவச் சொல்றாரே!’’

‘‘தலைவர் வீட்டுக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகளை, எதுக்கு பட்டாசு வெடிச்சு வரவேற்கறாங்க?’’
‘‘நூறாவது முறையா ரெய்டுக்கு வர்றாங்களாம்!’’

‘‘விஞ்ஞானபூர்வமா தீபாவளி கொண்டாடினேன்னு தலைவர் சொல்றாரே... உண்மையா?’’
‘‘நீ வேற... நிறைய ராக்கெட் விட்டதைத்தான் அப்படிச் சொல்றார்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.