கலக்கல் தீபாவளி கலெக்ஷன்ஸ்!





*  சென்னை சில்க்ஸ்  
சென்னை சில்க்ஸின் தீபாவளிப் புதுவரவு ‘விவாஹா பட்டு’ மற்றும் நறுமணம் வீசும் புடவைகள். பல்வேறு வேலைப்பாடுகளுடன் விதவிதமான டிசைன்களில் பாரம்பரிய விவாஹா பட்டு கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களாக உள்ளன. பல்வேறு வண்ணங்களாலான நறுமணம் வீசும் புடவைகள் மல்லி, ரோஸ், பைனாப்பிள் என பல்வேறு நறுமணத்தில் வந்துள்ளன. இருபது தடவைக்கு மேல்

துவைத்தாலும் இந்த நறுமணம் மாறுவதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஆயிரம் ரூபாயிலிருந்து இந்தப் புடவைகள் விலை தொடங்குகிறது.

*  போத்தீஸ்
சேலை பிரியைகளுக்கு போத்தீஸின் இந்தாண்டு தீபாவளி அறிமுகம் ‘ஜலக் டிசைனர்’. வண்ண வண்ண டிசைன்களில் அசத்தும் இந்தப் புடவைகள் இளமைக்கேற்ற ஸ்டைலாகக் காட்சியளிக்கின்றன.

இதோடு இளம்பெண்களை வசீரிக்கும் ‘வசுந்தரா லைட்’ வகைப் புடவைகள் கண்ணைக் கவர்கின்றன. ஜரிகை வேலைப்பாடுகள் ரொம்பவே ஈர்க்கின்றன. குர்த்தீஸில் அனோக்கி, சல்வாரில் நக்ஷத்ரா,

ஸாரா என விதவிதமான கலெக்ஷன்கள் புது வரவாக இளசுகளின் நெஞ்சத்தை வசீகரிக்கின்றன. ஜலக் டிசைனர்  ரூ.1600 முதல் ரூ.5000 வரை. வசுந்தரா லைட்  ரூ.2800 முதல் ரூ.3700 வரை.



*  லலிதா ஜுவல்லர்ஸ்
நுணுக்கமான வேலைப்பாடுகள். விதவிதமான டிசைன்கள். கலர்ஃபுல்லாக பார்வைக்கு பளிச்சென்று தெரியும் இந்நகைகளை தீபாவளியின் புதிய வரவாக லலிதா ஜுவல்லர்ஸ் வடிவமைத்துள்ளது.

‘டெம்பிள் ஜுவல்ஸ்’ எனப்படும் இந்த நகைகளில் அம்மனின் உருவ முகப்பு கண்ணைப் பறிக்கிறது. இதில் லைட் வெயிட் டிசைன்கள் நிறையவே வந்துள்ளன. இதனோடு ‘ஜுனாகர் ஜுவல்ஸ்’ எனப்படும் மற்றொரு புதிய வரவு, வைர நகையை அணியும் தோற்றத்தைக் கொடுக்கிறது. பழைய டைமண்ட் செட் நகையை மார்டன் டிரெண்டுக்கு ஏற்ப வடிவமைத்துள்ளது அசத்தலாக இருக்கிறது.  




*  முஸ்தபா ஜுவல்லர்ஸ்
வண்ண வண்ணக் கற்கள், சுற்றிலும் மணிகள் என நவயுகப் பெண்களைக் கவர்ந்து இழுக்கும் டிசைன்களோடு முஸ்தபா ஜுவல்லர்ஸின் ‘கொல்கத்தா டிசைன்’ மாடல்கள் இந்த வருட தீபாவளியின்

புதுவரவு. கொஞ்சம் வெயிட் என்றாலும் விதவிதமான டிசைன்கள் கண்ணைக் கவர்கின்றன. இதோடு ‘கேரளா டிசைன்’ மாடல்களின் வெரைட்டி அழகு கூட்டுகிறது.

*  ஆஷிகா
விதவிதமான டிசைன் பிரியர்களுக்கு ஆஷிகா சூப்பர் சாய்ஸ். வெரைட்டியாக புடவைகள், சல்வார் கம்மிஸ்கள், குர்த்தீஸ் வகைகள் இளம் பெண்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளன. ஆண்களுக்கான

ஷெர்வானி சிறந்த வேலைப்பாடுடன் கிடைக்கின்றன. புடவை விலை  ரூ.ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. 



*  சுந்தரி சில்க்ஸ்
‘புல்காரி’ சாரீஸ். பாரம்பரிய புடவைகளுக்குப் பெயர் போன சுந்தரி சில்க்ஸின் தீபாவளி அறிமுகம். பஞ்சாப் பாரம்பரிய டிசைன்களை அப்படியே காஞ்சிபுரத்தோடு இணைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.

விதவிதமான வர்ணங்களோடு பார்ப்போரின் கண்ணைப் பறிக்கின்றன இந்த சேலைகள். இதோடு கண்டாங்கி முத்து கட்டம் மற்றும் தஞ்சாவூர் பெயின்டிங்கில் காணப்படும் கிளிகளை வைத்தே

தயாரித்துள்ள புடவைகள், டை அண்ட் டை சேலைகள் என பெண்களை ஈர்க்கும் வரவுகள் மேலும் அழகூட்டுகின்றன. புல்காரி  ரூ.22 ஆயிரம், டை அண்ட் டை ரூ.6500, கண்டாங்கி முத்து கட்டம்  ரூ.8 ஆயிரம். 



*  ரதி சில்க்ஸ்
நெட்டட் ரசகுல்லா, கோரா காட்டன் பாவாடைகளும், சுத்தமான பட்டில் உருவான மயில் டிசைன் பாவாடையும் ரதி சில்க்ஸின் இந்த தீபாவளி புது வரவுகள். நடக்க ஆரம்பிக்கும் ஒரு வயதுக் குழந்தை முதல் 15 வயது வரையிலான சிறுமிகளுக்கு மயில் டிசைன் பாவாடைகள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கான பெஸ்ட் சாய்ஸாக இது ஜொலிக்கிறது. இதன் விலை, ரூ.3500 முதல் தொடங்குகிறது.




கோரா காட்டன் ரூ.500லிருந்தும், நெட்டட் ரசகுல்லா ரூ.670லிருந்தும் தொடங்குகின்றன.

*  கஜானா ஜுவல்லர்ஸ்
கஜானாவின் இந்த தீபாவளி புதுவரவு ‘தன்வி’ கலெக்ஷன்ஸ். மாங்காய் டிசைன் நெக்லஸ் மற்றும் பூ டிசைன் ஆரம் ஆகியவற்றில் மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்து காட்சியளிக்கின்றன. இந்தக் கலெக்ஷன் பார்ப்போர் கண்களைக் கவர்கின்றன.