ஜோக்ஸ் 1





‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘குற்றப் பத்திரிகையோட இணைப்பா, தீபாவளி ஸ்வீட் ஒரு கிலோ கொடுத்தாங்களாம்..!’’

‘‘தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘தீபாவளித் தள்ளுபடியில தொண்டர்கள் கிடைப்பாங்களான்னு கேட்கறாரே..!’’

‘‘அந்தப் பட்டாசு கடைக்காரருக்கு பொய் சொல்றதுக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு...’’
‘‘என்ன சொல்றார்..?’’
‘‘அவர் கடையில விக்கற ராக்கெட், கண்டம் விட்டு கண்டமே பாயும்ங்கறாரே!’’

‘‘உங்க வயித்தை ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல, கல்லு மாதிரி ஏதோ ஒண்ணு உள்ளே இருக்கே...’’
‘‘அது என் மனைவி தீபாவளிக்கு செஞ்ச மைசூர்பாகுதான் டாக்டர்!’’


‘‘தலைவருக்கு இது தலை தீபாவளி மாதிரி...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘புது ஜெயில்ல கொண்டாடறாரே..!’’

தீபாவளி தத்துவம்
தீபாவளிக்கு வாடகைக்கு பாத்திரங்கள் வாங்கி சமைக்கலாம்; வாடகைக்கு பட்டாசுகள் வாங்கி வெடிக்க முடியுமா?
 திருப்பிக் கொடுக்க முடியாத கடன்பட்டோர் சங்கம்

‘‘தலைவர் இப்ப தாவினது ரொம்ப சின்னக் கட்சி போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்சி தாவினதுக்கு கார் கொடுக்காம, வெறும் ஸ்வீட்டும், பட்டாசும் கொடுத்து முடிச்சுட்டாங்களே..!’’