ஜோக்ஸ் 2





‘‘தூங்கி எழுந்த தலைவர், ஏன் பசங்க மேல கடுப்பா இருக்கார்..?’’
‘‘டென் தௌஸண்ட் வாலா பட்டாசை வெடிச்சு, அவரோட ‘பிரதமர் கனவை’ கலைச்சுட்டாங்களாம்..!’’

‘‘அந்த பட்டாசுக் கடையில எதுக்கு போலீஸ் சோதனை போடறாங்க..?’’
‘‘அங்க ‘மனித வெடிகுண்டு’ விக்கிறதா யாரோ புரளி கிளப்பிட்டாங்களாம்..!’’

 தீபாவளி தத்துவம்
என்னதான் தீபாவளி அன்னிக்கு நடக்குற கிரிக்கெட் மேட்ச்னாலும், ‘டாஸ்’ போட்டுத்தான் பார்ப்பாங்க; பட்‘டாஸ்’ போட்டுப் பார்க்க மாட்டாங்க!
 பட்டாசு போடாமல் கிரிக்கெட் பந்துக்கு தத்துவ பேட் பிடிப்போர் சங்கம்

தீபாவளி ஸ்பீக்கரு...
‘‘தீபாவளிக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் செய்ய அனுமதித்தும், எங்கள் தலைவரை ‘ரிலீஸ் செய்ய’ அனுமதிக்காத இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’

‘‘இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட் வெடின்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய் விழுந்திருக்கே..!’’

என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும், அவருக்கும் ‘வோட்டு’தான் விழும்; ‘வேட்டு’ விழாது!
 வோட்டை வைத்து பட்டாசு கடைக்காரரை ஓட்டுவோர் சங்கம்
 ராம்ஆதிநாராயணன்

‘‘சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல...’’
‘‘என்ன பண்றார்..?’’
‘‘பட்டாசுக் கடையில போய் ‘ஊறுகா வெடி’ இருக்கான்னு கேட்குறார்..!’’