சினிமாவுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் இழப்பு நமகக்குதத்தான்!





‘‘ ‘காதல்னா மழை மாதிரி... இசை மாதிரி... அந்த ஃபீலிங்கில் கரையணும். காதல் சொல்றது இல்லை, அள்றது...’  இப்படி காதலைப் பற்றிச் சொல்லி படம் எடுத்ததெல்லாம் ஒரு காலம். இப்போ சினிமா அடுத்த கட்டத்திற்கு வந்திருச்சு. மலையாள சினிமா மீண்டும் விழித்துக்கொண்ட தருணம் இது. சினிமாவோட தொடர்பே இல்லாத சினேகிதி ஒருத்திதான், ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தோட சி.டியைக்

கொடுத்தா. அது என்னை ராத்திரி தூங்க விடாமல் பண்ணி... ஏன், எதற்கு, எப்படின்னு கேள்வி கேட்டுட்டுப் போச்சு. என் ‘ரீஎன்ட்ரி’க்கு இதுதான் அருமையான சினிமான்னு முடிவு பண்ணி ‘மாலினி 22

பாளையங்கோட்டை’யை ஆரம்பிச்சேன். படம் கிட்டத்தட்ட ரெடி’’  அருமையாகப் பேசுகிறார் டைரக்டர் ஸ்ரீப்ரியா. தமிழ் சினிமாவை ஒரு சமயம் ஆளுகை செய்த தமிழ் நடிகை, இயக்குநர்.

‘‘புகழ்பெற்ற ஒரு படத்தை ரீமேக் செய்வது கூட பெருங் கலை. அதற்கு பங்கம் வரக்கூடாது.
எப்படியிருக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை?’’

‘‘எனக்கு இந்த சினிமா பிடிச்சதற்கு காரணம், எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கையாண்ட விதம்தான். கேரள நகர்ப்புறம் தன்னுடைய பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து வெகுதூரம் நகர்ந்து

விட்டதை ஒப்புக்கொண்டு, அதைப் பதிவு செய்கிற நேர்மையும் அவங்களுக்கு இருக்கு. பெண்மை, கற்பு, ஒழுக்கம், லட்சியம் போன்ற மதிப்பீடுகள் இப்ப வேறு வேறு அர்த்தங்கள் பெற்று இருக்கு.

சின்னதா தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றங்கள் செய்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நாம தவிக்கப்போவது கலாசாரம், பண்பாட்டில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றித்தான்.

வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே போக நினைக்கும்போது, பாரம்பரிய மதிப்பீடுகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பெண்களுக்கு இருக்கு. பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதை

மட்டும் இங்கே சரியாகத் தெரிந்துகொண்டு எவ்வளவோ துன்பங்களைக் கொடுக்கிறது சமூகம். இதனால் வரும் சொல்ல முடியாத வேதனைகள், வெளியே சொல்ல முடியாத தவிப்புகள் ஏராளம்.



பெண்களுக்கு எப்படியெல்லாம் பிரச்னை வரும் என ஒரு தேர்ந்த வழிகாட்டுதல் இதில் இருக்கு!’’

‘‘நித்யா மேனன், கிருஷ் என இந்த சினிமாவிற்கு கொடுத்திருக்கிற உழைப்பைச் சொல்லுங்க..?’’

‘‘இதில் நித்யா மேனன் ரோல் நிச்சயம் வேடிக்கையானதல்ல. எமோஷனல் பின்னி இணைந்திருக்கிற வடிவத்தோட இருக்கு. இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில், அதுக்கான எல்லா

ஆர்டிஸ்ட்களையும் முடிவு பண்ணிட்டேன். மிக முக்கியமாக இருந்தது ஹீரோயின். அது சேலஞ்சிங்கான விஷயம். ‘இதை யார் செய்ய முடியும், இதுக்கு யார் சம்மதிப்பாங்க’ன்னு இரண்டு கேள்விகள்

இருந்தது. முதலிலேயே எனக்கு பட்டது நித்யாதான். ஷாக்கிங்கான ஒரு பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆரம்பத்தில் மறுத்தாங்க. ‘பெண்கள்

எதிர்கொள்ளும் வன்முறை மீது எனக்கு இருக்கிற கோவம், வருத்தம் உங்களுக்கும் இருந்தா சரின்னு சொல்லுங்க’ன்னேன். உடனே ஓகே சொன்னதோட, அற்புதமான நடிப்பைக் கொடுத்தாங்க. என் தேர்வு

அவ்வளவு கச்சிதம்னு தோணுது. ஹீரோவுக்கு கொஞ்சம் பேரை அணுகினேன். இதில் இருந்த நெகட்டிவ் தன்மையைப் பார்த்திட்டு ‘ஸாரி...’ சொல்லிட்டாங்க. இத்தனைக்கும் அங்கே பகத் பாசில் நடிச்சு

பெரும் புகழ் பெற்றார். உடனே, அக்கா ஜெயபாரதியின் பையன் கிருஷ், ‘நான் செய்யறேன் ஆன்ட்டி’ன்னு வந்தார். ‘அடடா... நாம விட்டுட்டோமே’ன்னு மறுத்தவங்க வருத்தப்பட வாய்ப்பிருக்கு.’’

‘‘இவ்வளவு நாளைக்குப்
பிறகும் சினிமாவில் இருக்கிற
அக்கறை எப்படி..?’’

‘‘சினிமாவுக்கு வரலேன்னா சிங்கப்பூர் போய் எஞ்சினியராகி இருப்பேன், டாக்டராகி இருப்பேன்னு சொல்ற மாதிரி எதுவும் தெரியாது. 14 வயதில் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவைத் தவிர எதுவுமே

தெரியாத காலம் இருந்தது. இத்தனை கோடி மக்களை இம்ப்ரஸ் பண்ற ஒரு பெரிய மீடியாவில் இருக்கோம் என்பதுதான் சந்தோஷம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய், ரஜினி, கமல்னு எவ்வளவு பெரிய

ஆளுங்க. அவங்களோட நடிச்ச அனுபவங்களை மறக்க முடியுமா? என்னை இந்த டி.வியும் மறக்கல. எந்த நாளிலும் ஸ்ரீப்ரியா நடிக்கிற ஒரு படத்தை யாரும் மிஸ் பண்ணிட முடியாது. என் பொண்ணு

லண்டனுக்கு ‘லா’ படிக்கப் போயிருக்கா. மகன் பிளஸ் 1 வந்தாச்சு. அவங்களே சுயமா இயங்க முடிகிற காலம். அழகா ஒரு படத்தை கணவரே தயாரிக்க ரெடியானதும் வந்துட்டேன். எப்பவும் என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருந்தது, இப்ப ரொம்ப உதவியா இருக்கு.’’



‘‘அப்பவும், இப்பவும் எப்படியிருக்கு தமிழ் சினிமா?’’

‘‘ஜெய், அசோகன்  ரெண்டு பேரும்தான் அப்ப படிச்சவங்க. கமல் அதுக்கும் மேலே பெற்றது பெரிய அனுபவ அறிவு. எங்களுக்கு இந்த சினிமா தவிர எதுவும் தெரியாது. சரியா டயத்துக்கு வருவோம்;

உயிரைக் கொடுத்து நடிப்போம். அடுத்த படம், அடுத்த ஷூட்டிங்னு பறப்போம். டைரக்டருக்கு எப்பவும் மரியாதைதான். சினிமாவை ‘ஹாபி’ன்னு நினைக்கலை. சிவாஜி சார் ஏழு மணிக்கு ஷூட்டிங் வர்றார்னா, கடிகாரத்தை மாத்தி சரியா வச்சுக்கலாம். அப்போ, நடிப்பைப் பிழைப்பாக எடுத்துக் கொள்ளாமல் ஆத்ம தரிசனமாகச் செய்தோம். என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவுக்கு மரியாதை கொடுக்காமல் வேலை செய்தால் இழப்பு நமக்குத்தான். இந்த சினிமா நூற்றுக்கணக்கான பேரை ஏற்றிவிட்டு, சரியா இல்லைன்னா அந்த வேகத்திலேயே இறக்கி விட்டுட்டு போயிருக்கு. இப்ப இருக்கிற நடிகர், நடிகைகள் புத்திசாலிகள்... தெளிவா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க!’’
‘‘இப்ப இருக்கிற நடிகர், நடிகைகளில் யாரைப் பிடிக்குது?’’



‘‘நயன்தாரா... ரொம்ப பிடிக்கும். ‘ஸ்ரீராம ராஜ்ஜிய’த்தில் சாட்சாத் சீதையேதான். ‘பில்லா’வில் ஸ்விம் சூட் போட்டு வந்தா அசத்துது. ‘லூசுப்பெண்ணே’ன்னு பாடி வச்சாலும் பொருத்தமா இருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சு வந்தாலும் ஸ்டெடியா இருக்கு. அஜித்தை எங்கேயாவது ஸ்டார் ஓட்டலுக்கு சாப்பிடப் போகும்போது பார்ப்பேன். தூரத்தில் இருப்பார். எனக்கு தனிப்பட்ட பழக்கம் கிடையாது. எதுக்கு அவரைப் போய் தொந்தரவு செய்யணும்னு இருந்தால், அவரே வந்து பக்கத்தில் உட்கார்ந்து ‘எப்படியிருக்கீங்க?’ன்னு அன்பா விசாரிச்சிட்டுப் போவார். அப்புறம் இப்ப இருக்கிற புது ஹீரோக்களில் விஜய்சேதுபதி பிடிக்குது. பின்றார். இதுதான் ஹீரோவின் லிமிட்னு இருக்கு இல்லையா... அதை உடைக்கிறார். எல்லா விதமான நடிப்பும் அவருக்கு வருது!’’
 நா.கதிர்வேலன்