வேலைக்காரி



‘‘பொன்னம்மா! என் தோழி சுபா ரெகமெண்ட் பண்ணினதால், உன்னை வீட்டு வேலைக்கு வச்சுக்கிறேன். எங்க கண்டிஷனைக் கேட்டுக்கோ... காலையில் ஏழு மணிக்கெல்லாம் வேலைக்கு வர ணும். லேட் பண்ணக் கூடாது. பாத்திரங்களைத் துலக்கி, வீடு பெருக்கணும். சமையல் வேலையிலே எனக்கு துணையா இருக்கணும். அப்புறம் துணிமணி எல்லாம் துவைச்சுப் போடணும். வீண்  கதை எல்லாம் பேசக் கூடாது. நான் கொடுக்கிற சாப்பாட்டைத்தான் வாங்கிக்கணும். மாசக் கடைசியிலே ஒரு தடவையாதான் சம்பளம் தருவோம். நடுவுல பணம் கேக்கக் கூடாது. இந்த கண்டிஷனு க்கு ஒத்துக்கிட்டா வேலைக்கு வரலாம்!’’ - ரேவதியின் கண்டிஷன்



பட்டியலைப் பொறுமையாகக் கேட்டாள் பொன்னம்மா. ‘‘சரிம்மா, உங்க கண்டிஷனை நீங்க சொல்லிட்டீங்க! என் கண்டிஷனையும் சொல்றேன்...’’
‘‘என்ன, உனக்கும் கண்டிஷனா? ம்... சொல்லு, பார்ப்போம்!’’ ‘‘தினமும் காலை என் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டுத்தான் வேலைக்கு வருவேன். பாத்திரங்கள் துலக்குவதிலும், வீடு பெருக்குவதிலும் எந்தக் குத்தம் குறையும் சொல்லக்கூடாது.

துணிமணி எல்லாம் வாஷிங் மெஷினில்தான் துவைப்பேன். பழைய சாப்பாடு எதையும் வாங்கிப் போக மாட்டேன். மாசா மாசம் சம்பளத்தை என் பேங்க் அக்கவுன்ட்ல கிரெடிட் பண்ணிடணும்!’’ - பொன் னம்மாவின் கண்டிஷன்களைக் கேட்டதும் ரேவதிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.   

கு.அருணாசலம்