என்னென்ன நடக்குமோ!



புஷ்பா தங்கதுரையின் பேட்டி, 12 வருடங்கள் கழித்தும் இன்று பேசியது போலவே இருந்தது. அவரது வார்த்தைகளில் உள்ள யதார்த்தமும், உண்மையும் இன்னும் 12 வருடங்கள் கழித்தும் பொருந்தும்!

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி நட்ராஜ், ‘எல்லா புகார்களுக்கும் எப்.ஐ.ஆர் பதிவு கட்டாயம் என்பது காவல்துறைக்கு தேவையற்ற பணிச் சுமையையும், அழுத்தத்தையுமே உருவாக்கும்’ என்று சொன்னது நெத்தியடி!


- மா.மாரிமுத்து, ஈரோடு.

‘பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்தியாவின் எந்த மூலைக்கும் செல்லத் தயார்’ என ‘நிர்பயா’வின் பெற்றோர் கூறியிருப்பது அவர்களின் சமூக உணர்வைக் காட்டியது!

- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

சச்சின் சாதனைகள் என்று எல்லோரையும் போல் அரைத்த மாவையே அரைக்காமல், சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பத்து வாழ்க்கைப் பாடங்களைப் பட்டியலிட்டிருந்தது ஏ ஒன்!

- எம்.குணசேகரன், வேலாயுதம்பாளையம்.

குளிரும் மழையும் பருவம் மாறி மாறி வருகின்றன. எந்த நேரத்தில் என்ன இயற்கைப் பேரழிவு ஏற்படும் என்றே சொல்ல முடியாத இந்தக் காலத்தில் பூகம்ப பாதிப்புகளைத் தாங்கும் தெர்மாகோல் வீடு, நிச்சயம் வரப்பிரசாதம்தான்!

- இரா.சுந்தரம், புதுச்சேரி.

வாழை நாரிலிருந்து 22 வகையான பொருட்களைத் தயாரித்து டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி முருகேசன், ‘நாரும் மணக்கும்’ என்பதை நிரூபித்து விட்டார்.

- கல்யாண், கோபிசெட்டிபாளையம்.

ஆர்யா, நயன்தாரா பற்றி கிசுகிசுக்கள் பட்டை கிளப்பிக் கொண்டிருக்க, செல்வராகவன் தன் பங்குக்கு ஆர்யாவும் அனுஷ்காவும் மகா காதலர்கள் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். இனி என்னென்ன நடக்குமோ!

- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

எஞ்சினியரிங் படித்தும் ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதற்கான பகீர் காரணங்களை பட்டியல் போட்டு நீங்கள் ‘ஊதுற சங்கை ஊதி விட்டீர்கள்’... அது அவர்கள் காதில் விழ வேண்டுமே!

- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

இந்த வாரம் ஆல்தோட்ட பூபதி பழசும் புதுசும் என்று சொன்ன பஞ்ச்கள் அடேயப்பா!

- ஆர்.ராம் சந்துரு, சென்னை-33.

‘நமது தெய்வங்களை அழிய விட்டு சினிமா நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நம் கோயிலில் நிரப்பி விட்டோம்’ என்று மனுஷ்யபுத்திரன் அடித்திருப்பது அவசிய அலாரம்!

- மா.மாரிமுத்து, ஈரோடு.

(குட்டிச்சுவர் சிந்தனைகள் - அடுத்த இதழில்...)

குங்குமம்
2.12.2013

சிமிழ்-36     பொட்டு-49
ரிகிலி பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு
வெளியிடுபவர் மற்றும்
ஆசிரியர்
முகமது இஸ்ரத்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை-600004.
முதன்மை ஆசிரியர்
தி.முருகன்
பொறுப்பாசிரியர்
நா.கதிர்வேலன்
தலைமை நிருபர்
வெ.நீலகண்டன்
தலைமை உதவி ஆசிரியர்
கோகுலவாச நவநீதன்
நிருபர்கள்
எஸ்.ஆர்.செந்தில்குமார், டி.ரஞ்சித், அமலன், பேராச்சி கண்ணன்
உதவி ஆசிரியர்
சி.பரத்
முதன்மை புகைப்படக்காரர்
புதூர் சரவணன்
உதவி புகைப்படக்காரர்கள்
ஆர்.சந்திரசேகர்,ஏ.டி.தமிழ்வாணன்
சீஃப் டிசைனர்
பி.வேதா
டிசைன் டீம்
ஆர்.சிவகுமார், பா.லோகநாதன்
ஏ.எஸ். சரவணன், எம்.முருகன், எஸ்.பார்த்திபன்

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai600004.
Editor: Mohamed Israth

ஆசிரியர் பிரிவு முகவரி:
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை-600004.
தொலைபேசி: 42209191 தொலைநகல்: 42209110
மின்னஞ்சல்:editor@kungumam.co.in 

படைப்புகளை தபாலிலும் அனுப்பலாம். மின்னஞ்சல் செய்ய:  editor@kungumam.co.in

www.kungumam.co.in

சந்தா விவரங்களுக்கு:
தொலைபேசி: 42209191 Extn 21120
மின்னஞ்சல்:subscription@kungumam.co.in
விளம்பரங்களுக்கு:
தொலைபேசி: 44676767 Extn  13234.
மின்னஞ்சல்:advts@kungumam.co.in

twitter.com/Kungumammagazine

facebook.com/Kungumammagazine