facebook வலைப்பேச்சு



பட்டாம்பூச்சி மென்மையானதுதான், பைக் பயணத்தில் முகத்தில் அடிக்காதவரை...
- டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி

உதிர்ந்த சருகுகளுக்காக அழுவதில்லை மரம். புதிய தளிர்களை அது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
- பெ கருணாகரன்

பிரியாணி வேணும்னாகூட ஒடனே ஆக்கிப்புடலாம்; ஆனா பழைய சோறு வேணும்னா, ஒரு நாள் பொறுத்துத்தான் ஆகோணும்!
- மோகனசுந்தரம் சோமசுந்தரம்



கனத்தைக் குறைத்தால் பறத்தல் எளிது...
பயணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான்!
- சண்முக வடிவு
ஜெயித்தவன் பொன்மொழிகள் சொல்கிறான்; தோற்றவன் தத்துவங்களை உதிர்க்கிறான்..!
- தம்புசாமி ஞானராஜ்

வருடம் முழுவதும் குடி, புகைன்னு எல்லாத்தையும் பழகிக்கிட்டு, 48 நாளைக்கு மட்டும் அடக்க ஒடுக்கமா இருக்கறது பக்தியில் ஒரு ரகம்.
- அன்பு சிவன்

நிஞ்சா கட்டோரியும், சோட்டா பீமும் தங்கள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, என்னவரின் கிரிக்கெட் மேட்ச் பாக்குற ஆசையையும் என் சீரியல் பார்க்கும் ஆசையையும் அழித்து விடுகிறார்கள்...

- ப்ரியா கார்த்திகேயன்

நிதானம், மனிதம், மனஒருநிலை, உழைப்பு, உண்மை, மனஉறுதின்னு சச்சின் கிட்ட கிரிக்கெட் தவிர ஏராளம் கொட்டிக் கிடக்கு!  அதுக்குத்தான் கண்ணுல தண்ணி வெச்சுருக்கோம்!
- மகிந்திஷ் சதிஷ்

போர்க் குற்றம் என்ற பயன்பாடு, போர்களை நியாயப்படுத்துகிறது... ஏதோ குற்றமில்லாத போர் சாத்தியம் போல! போரே குற்றம்தான்.
- ஞாநி சங்கரன்

twitter வலைப்பேச்சு

@rajiniramv
  சிம்புவுடன் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. நடனம் பிரபுதேவாவைப் போடுங்க, நல்ல காம்பினேஷனா இருக்கும்...

@ Jenguru
மீனவர்களை   கடல் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
# முதல்ல அவங்க இந்தியர்னு அறிவிச்சு காப்பாத்துங்க!
@ Senthilbds
சாத்தானுக்கும்   படைக்க, காக்க, அழிக்கத் தெரியும். எதை என்பதில்தான் கடவுளிலிருந்து வேறுபடுகிறது!
@ begum_banu
உனக்கு   உதவ முடியாது என்பதைத்தான் சில நல்ல உள்ளம் கொண்டவர்கள், ‘‘என்னால் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்கிறார்கள்...
@manipmp
பைக்கிற்கும்   அடி சறுக்கும்
# மண் ரோட்டில்
@kalasal
ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் உண்டாகுதோ, இல்லையோ... ஆனா குண்டாகிடுது!
# நானே சிந்திச்சேன்...
@muralikkannan
வேலை செய்யும்போது ஏற்படும் டென்ஷனை விட, வேலையை தக்க வைக்க பாடுபடுவதே அதிக டென்ஷனைத் தருகிறது...
@urs_priya
இளமை ஆண்களை பார் பக்கமும், பெண்களை பார்லர் பக்கமும் திசை திருப்புகிறது!
@Tottodaing
கொஞ்சம்   எழுதி மை தீர்ந்த பேனாவில், ஆணவத்தை நிரப்பி விடுகிறார்கள்!
@TamilaninDairy
‘‘சும்மாதான் மச்சான் இருக்கேன்’’னு சொல்ற நண்பன் முகத்துல சிரிப்பிருந்தாலும், அந்த வலியை உணர நண்பனால் இயலும்!
@Sricalifornia
தெலுங்கு பாடல்கள் கேட்டால் பாதிக்கு மேல், தெரிந்த தமிழ்ப் பாடல்களின் ட்யூன். கொடுக்கல், வாங்கல் நிறைய போல...
@arivucs
குப்பையில் கொட்ட மனமில்லை... அதுவே தொப்பை வளர்ந்த கதை!
@iindran
நீ யாரென எனக்குத் தெரியும். நான் யாரென உனக்குத் தெரியும். ஆனால் நீ யாரென எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது
# சுவாரஸ்யம்!
@amas32
மகளிர் காவல் நிலையங்கள் நிச்சயம் தேவை. மகளிருக்கான தனி வங்கிகளின் தேவை எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை.
@RenugaRain
சரக்கடிக்கும்போது எதுக்கு ஊறுகாய் திங்கறாங்க? டேஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணவா?
# சீரியஸ் டவுட்!
@thirumarant
நான் முதன்முதலில் சென்னை வந்தபொழுது என்னை அன்புடன் வரவேற்றது ஒரு பெண்ணியவாதிதான்... ‘‘அதான் லேடீஸ் சீட்டுன்னு எழுதியிருக்குல்ல... எந்திரி!’’