தத்துவம் மச்சி தத்துவம்




‘‘அந்த மருந்துக் கடைக்காரனை எதுக்கு கண்டபடி திட்டிட்டு வர்றே..?’’
‘‘பிரிஸ்கிரிப்ஷன்ல டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்குக்கூட ஒரு மாத்திரை கொடுக்கறானே...’’
- சரவணன், கொளக்குடி.



‘‘நான் ஒரு அனாதைங்கிறது உங்களுக்குத் தெரியுமா டாக்டர்..?’’
‘‘ஏன் தெரியாது... உங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நான்தானே ஆபரேஷன் பண்ணினேன்!’’

- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

‘‘நான் பாட வந்துள்ள செய்தியை மன்னரிடம் கூற மறுக்கிறீர்களே... ஏன் அமைச்சரே?’’
‘‘அதிர்ச்சி தரும் எந்தச் செய்தியையும் மன்னரிடம் கூற வேண்டாமென்று அரண்மனை வைத்தியர் கூறியிருக்கிறார், புலவரே!’’

- கே.தண்டபாணி,
பொள்ளாச்சி.


பாளையங்கோட்டை ஜெயிலுல மணி அடிச்சா சோறு; பக்கத்து தெரு மணியை நாம அடிச்சா ஜெயிலு. இதுதாண்டா லைஃப்!
- வேலூரிலிருந்து திகாருக்கு டிரான்ஸ்பர் கேட்டு காத்திருப்போர் சங்கம்

- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘தலைவர் ஜெயிலுக்கு புதுசு போலிருக்கு..?’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘சாப்பிடப் போன இடத்துல ‘மெனு கார்டு’ கேட்கறாரே..!’’

- பெ.பாண்டியன், காரைக்குடி.


கோபம் வந்துட்டா யார் வண்டவாளத்தையும் தண்டவாளத்துல ஏத்தலாம். சரி, அந்த நேரத்துல தண்டவாளத்துல எக்ஸ்பிரஸ் வந்துட்டா என்ன செய்வீங்க?
- எதையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தத்துவமாக்கும் மூளைக்காரர்கள் சங்கம்

- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘நான் பதுங்கு குழிக்குள் இருந்ததை எதிரி எப்படிக் கண்டுபிடித்தான், தளபதியாரே..?’’
‘‘தாங்கள் உடன் அழைத்துச் சென்ற அந்தப்புரப் பெண்களின் சிரிப்பு சத்தத்தை வைத்துத்தான் மன்னா!’’

- பர்வீன் யூனுஸ், சென்னை-44.