கர்ணனின் கவசம்




‘‘என்ன சொல்றீங்க ரவிதாசன்... கர்ணனோட கவச குண்டலத்தை ஆதித்த கரிகாலன் அணிஞ்சானா?’’ திகைப்புடன் கேட்டான் ஃபாஸ்ட்.
‘‘சரித்திரக் குறிப்புகள்ல இப்படியொரு சம்பவத்தை நான் படிச்சதில்லையே..?’’ என்று ஆமோதித்தான் சூ யென்.
‘‘நமக்கு கிடைச்ச சில தகவல்களைத்தானே வரலாற்றுக் குறிப்புகளா சொல்றோம்? கிடைக்காத பல விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு...’’ பாலாவை நோக்கி அடியெடுத்து வைத்த ரவிதாசன், நின்று  நிதானமாக பதிலளித்தான்.



‘‘அதாவது தன்கிட்ட இருந்த கவசத்தை ஆதித்த கரிகாலன்கிட்ட இந்திரன் கொடுத்தான்னு சொல்றீங்க?’’ இடையில் புகுந்த ஆனந்த், பரபரத்தான். ‘‘ஆமா... எங்க கடிகை எங்க இருந்தது? சேர நாட்ல இருந்த காந்தளூர்ச் சாலைல. சேர நாடு பரசுராமரோட க்ஷேத்திரம். அவரோட நிலப்பரப்பு அது. அங்கதான் பிராமணனா வேஷம் போட்டு வ ந்த கர்ணன் வித்தைகளை கத்துக்கிட்டான். பிரும்மாஸ்திரத்தை எப்படி ஏவணும்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினான். ஆனா, ஒரு வண்டு அவனோட வேஷத்தைக் கலைச்சிடுச்சு. ஒரு க்ஷத்ரியன்  தன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சதும் பரசுராமர் ஆவேசப்பட்டாரு. ‘அவசியமான நேரத்துல வித்தைகளை நீ மறந்துடுவே’ன்னு சாபமிட்டாரு.

இந்த சாபம்தான் கர்ணனோட உயிரைப் பறிச்சது...’’ ‘‘எல்லாம் சரி ரவிதாசன்... ஆனா, கர்ணனோட கவசம் எப்படி ஆதித்த கரிகாலனுக்கு கிடைச்சது?’’ தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ஃபாஸ்ட் கேட்டான். ‘‘இந்திரன்தான் கொடுத்தான். இந்திரனை நோக்கி தவம் செஞ்சு ஆதித்த கரிகாலன் அதை வாங்கினான். அதுக்குக் காரணம், சங்ககால சோழர்களோட முக்கியமான விழாவா இந்திர விழா இருந்தது


 தான். சிலப்பதிகாரத்துல இந்த விழா பத்தின செய்திகள் விலாவாரியா இருக்கு. அப்ப நடந்த ரதப்போட்டி, கிரேக்க புராணங்களுக்கு சமமானது. இதை மையமா வச்சுத்தான் ‘யவன ராணி’ சரித்திரத்  தொடரையே சாண்டில்யன் எழுதினாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் தெய்வமா கி.மு.வுல இந்திரன் இருந்தான். மாளிகையோட எரிக்கப்பட்ட கரிகால சோழனை அவனோட மாமா இரும்பிடைத்தலையார்  காப்பாத்தினது கூட இந்திரனோட உதவியோடத்தான். இதுக்குப் பிறகுதான் வேளிர்களை அழிச்சு,

 சோழ சாம்ராஜ்யத்தை கரிகால சோழன் ஸ்தாபிச்சான். அந்தப் பொற்காலத்தை திரும்பவும் கொண்டு வர கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுல ஆதித்த கரிகாலன் நினைச்சான். இதுக்குள்ள உப தெய்வமா சுருங்கியிருந்த இந்திரன், திரும்பவும் முக்கியமான கடவுளா விஸ்வரூபம் எடுக்கிறதுக்காக இதைப் பயன்படுத்திக்கிட்டான். ஆதித்த கரிகாலனுக்கு உதவ முடிவு செஞ்சு தன்கிட்ட இருந்த கர்ணனோட கவசத்தைக் கொடுத்தான். இதுக்கான அத்தனை ஆதாரங்களும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல இரு ந்த ஓலைச்சுவடிகள்ல இருந்துச்சு. ஆனா, தேவாரத்தை வெளிக்கொண்டு வர்றதுக்காக தில்லை கோயிலை ராஜராஜ சோழன் முற்றுகையிட்டப்ப, பல சுவடிகள் எரிஞ்சு சாம்பலாகிடுச்சு. அதுல இந்தக்  குறிப்புகளும் இருந்தது தான் வேதனையான விஷயம்...’’

‘‘இதெல்லாம்..?’’ என்று சூ யென் வாக்கியத்தை முடிப்பதற்குள் ரவிதாசன் எரிமலையானான். ‘‘எனக்குத் தெரியும். அதனாலதான் ஆதித்த கரிகாலனை கொலை செய்ய திட்டமிட்டோம். உப தெய்வமா சுருங்கிப் போன இந்திரன், திரும்பவும் முக்கியமான கடவுளா மாறுவதுல எங்களுக்கு  விருப்பமில்லை. தவிர கவசம் வேற, கர்ணன் வேற இல்ல... அந்தக் கவசம் யார் கைக்கு வந்தாலும் அவங்களும் கர்ணனா மாறிடுவாங்க. அழிவே இல்லாத பிறவியா வளர்ந்திடுவாங்க.

இது பர சுராமரோட சாபத்துக்கு எதிரானது. இதை எப்படி அவரோட பரம்பரைல வந்த எங்களால பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? ஸோ, ஆதித்த கரிகாலனை அழிக்க சபதம் போட்டோம். சரியா அந்த நேரம் பார்த்து நோய்வாய்ப்பட்டிருந்த எங்க மாணவனான பாண்டிய இளவரசனோட தலையை அவன் வெட்டினான். அதுக்குப் பிறகு நாங்க தாமதிக்கலை. கச்சிதமா எங்க வேலையை முடிச்சிட்டோம்... ஆதித்த கரிகாலனை தீர்த்துக் கட்டிட்டோம்...’’

‘‘எல்லாம் சரி ரவிதாசன்... அந்த ஆதித்த கரிகாலனோட வம்சத்தை சேர்ந்த இந்த ஆதித்யாவை எதுக்கு இப்ப அழிக்கணும்னு சொல்ற?’’ ‘‘இதைக் கூடவா உன்னால யூகிக்க முடியல..?’’ ஃபாஸ்ட்டை நோக்கி இகழ்ச்சியாகக் கேட்ட சூ யென், ‘‘இப்ப இந்த ஆதித்யா, கர்ணனோட கவசத்தை எடுக்கப் போறான்னு அர்த்தம். சரியா ரவிதா சன்?’’ என்றபடி அவனை ஏறிட்டான்.

‘‘ரொம்ப சரி...’’ ரவிதாசன் புன்னகைத்தான். ‘‘அதுக்கு இந்தப் பொண்ணு எப்படி உதவப் போறா?’’ ஆனந்த் புருவத்தை உயர்த்தினான்.
எல்லோரும் ரவிதாசனை அதே கேள்வியுடன் பார்த்தார்கள். அவர்களுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் பாலாவை நெருங்கிய ரவிதாசன், அவளை தன் இரு கைகளாலும் தூக்கினான். தரையில்  ஸ்ரீசக்கரத்தை வரைந்து அதன் மீது அவளை அமர வைத்தபடியே ‘‘ருத்ரனோட இதயத்தைக் கொடுங்க...’’ என்று கர்ஜித்தான்.

‘‘எரிகல் மனிதனா?’’ வாயைத் திறந்து கேட்டது உயரமான மனிதன்தான். ஆனால், அதே கேள்வி மற்ற எட்டு பேரிடமும் பூத்ததை அவர்களது முகமே காட்டிக் கொடுத்தது.
‘‘ஆமா... மணல் மனிதனோட அண்ணன். எரிகல் சுரங்கத்தோட மொத்த வடிவம்...’’ குள்ள மனிதனின் குரலில் எந்த சலனமும் இல்லை.
‘‘நீ சொல்றது புரியல...’’ மத்திம மனிதன் இடையில் புகுந்தான்.

‘‘புரூஸ் வில்லிஸ் நடிச்ச ‘அர்மகெடான்’ ஹாலிவுட் படம் நினைவுல இருக்கா?’’
‘‘மங்கலா இருக்கு. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’’ - தன் மார்பில் படபடவென்று அடித்துக் கொண்டே தங்களை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எரிகல் மனிதன் மீது ஒரு கண் ணைப் பதித்தபடியே உயரமான மனிதன் கேட்டான்.

‘‘பூமியை நோக்கி ஒரு நட்சத்திரம் வரும். அது பூமில விழுந்தா, மொத்த நிலப்பரப்பும் பொசுங்கிடும். அதனால விண்வெளிலயே அதை வெடிகுண்டு வச்சு தகர்ப்பாங்க. இதுதான் ‘அர்மகெடான்’  கதை...’’ ‘‘அது வெறும் கதைதானே?’’ - மத்திம மனிதன் குரலில் எரிச்சல் துளிர்விட்டது. ‘‘இல்ல... அமெரிக்காவும், ரஷ்யாவும் இருபது வருடங்களா முயற்சி செஞ்சுகிட்டு இருக்கிற   கிstக்ஷீஷீவீபீ னீவீஸீவீஸீரீ இது...’’ என்று குள்ள மனிதன் முடித்ததுமே, ‘‘கொஞ்சம் புரியும்படியா செ £ல்லு...’’ என்று உயரமான மனிதன் விண்ணப்பித்தான்.

‘‘சுருக்கமா சொல்லிடறேன். பால்வீதில இருந்த, ஆனா, இறந்த எரிகற்கள் எல்லாமே ஒரு ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு விண்ல சுத்திக்கிட்டு இருக்கு. இதனோட சிறிய கோள்கள், வால் நட்சத்திரங்க ளையும் சேர்க்கலாம். இதெல்லாம் சேர்த்துதான் ‘எரிகல் சுரங்கம்’. இது எல்லாத்துக்குள்ளயும் போய் அதுல இருக்கிற கனிமத்தை தோண்டி எடுக்கிற முயற்சிலதான் அமெரிக்காவும், ரஷ்யாவும் பல  வருடங்களா ஈடுபட்டிருக்கு. அப்படி எடுக்கிற கனிமத்தை ஸ்பேஸ் ஷிப் வழியா பூமிக்குக் கொண்டு வர்றதுதான் ப்ளான். சில கனிமத்தை விண்வெளிலயே ப்ராசஸ் பண்ணி அங்கிருக்கிற சாட்டிலைட் கள்ல பயன் படுத்தவும் முயற்சி நடந்துட்டு இருக்கு...’’

‘‘என்ன மாதிரி கனிமங்கள் கிடைக்கும்?’’ ஆவலுடன் மத்திம மனிதன் கேட்க, ரிலாக்ஸ் ஆக நின்றபடி இதையெல்லாம் அந்த எரிகல் மனிதனும் கேட்டுக் கொண்டிருந்தான். சிறுவர்கள் கதை பேசு வது போலவே அவனுக்குத் தெரிந்தது. ‘‘சொல்றதுக்கில்ல... இரும்பு, நிக்கல், டைட்டானியம் மாதிரியான கனிமங்களோட தண்ணீரும், ஆக்சிஜனும் கூட கிடைக்கலாம்...’’
‘‘அப்ப இந்த மனிதன்கிட்டேந்து நமக்கு என்ன கிடைக்கும்?’’

‘‘கர்ணனோட கவசத்துக்கான வரைபடம்...’’ கண்கள் பளிச்சிட குள்ள மனிதன் பதிலளித்தான். இதைக் கேட்ட எரிகல் மனிதன் சீற்றத்தின் மொத்த உருவமாக மாறினான். அவர்களை நசுக்குவதற்காக  அடியெடுத்து வைத்தான். தாரா பிரமை பிடித்து நின்றாள். நடராஜர் கண நேரத்தில் மறைந்து கிருஷ்ணரானதும், சுற்றிலும் வானவில் தோன்றியதும் அவளது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
‘‘ஹரியும் சிவனும் ஒண்ணு... இதை அறியாதவர் வாயில் மண்ணு...’’ என அவள் செவியில் முணுமுணுத்தான் ஆதித்யா.
‘‘ஆனா, இந்த வானவில்..?’’

‘‘இதுதான் இந்திரனோட
வஜ்ஜிராயுதம்... அதாவது விமலானந்தரோட ஆயுதம்...’’
‘‘என்ன உளர்ற? ரெயின்போதான் வஜ்ஜிராயுதம்னா அப்ப இந்திரன் யாரு?’’
‘‘காலம்...’’
‘‘வாட்..?’’
‘‘யெஸ் மிஸ் தாரா... ஐஸ் ஏஜ், ஸ்டோன் ஏஜுன்னு விதவிதமான காலத்தைப் பத்தி சயின்ஸ்ல படிச்சதில்லையா..?’’
‘‘படிச்சிருக்கேன். அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?’’
‘‘இருக்கு தாரா... அந்த ஒவ்வொரு ஏஜ்... காலத்தையும்தான் ஒவ்வொரு இந்திரனா உருவகப் படுத்தியிருக்கோம்...’’
‘‘அப்ப இதுவரை நடந்தது பூரா சயின்ஸ் ஃபிக்ஷனா?’’
‘‘இல்ல... மித், ஹிஸ்ட்ரி, சயின்ஸ் கலந்த அமானுஷ்யம்...’’
‘‘என்னவோ போ... இப்ப நாம என்ன செய்யணும்?’’
‘‘கர்ணனோட கவசம் இருக்கிற வரைபடத்தை எடுக்கணும்... அப்பதான் முகம் தெரியாத நம்ம நண்பர்களையும் காப்பாத்த முடியும்...’’
‘‘அதுக்கு என்ன செய்யணும்?’’
‘‘கண்ணனோட விஸ்வரூப தரிசனத்துக்குள்ள ஊடுருவணும்...’’
‘‘எப்படி?’’
‘‘திரிசங்கு சொர்க்கத்துல காஃபீன் மனிதனுக்குள்ள
நுழைஞ்சா மாதிரி...’’
அடுத்த நொடி, அதேபோல் கிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்கள். புன்னகையுடன் இதையெல்லாம் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் விமலானந்தர்.
‘‘எரிகல் மனிதன் நம்மை நோக்கி வர்றான்...’’ என்றபடி அனைவரையும் உஷார் படுத்தினான் உயரமான மனிதன்.
‘‘யாரும் பயப்பட வேண்டாம்... எல்லாரும் அவனை ரவுண்டு கட்டுங்க...’’ என்ற குள்ள மனிதனின் கட்டளைக்கு மற்றவர்கள் கீழ்ப்
படிந்தார்கள்.
‘‘வைகுண்டத்துல பீஷ்மர்கிட்டேந்து வாங்கின பிரும்மாஸ்திரம் யார்கிட்ட இருக்கு?’’ எரிகல் மனிதனை கவனித்தபடியே குள்ளன் கேட்டான்.
‘‘என்கிட்ட...’’ என்றான் மத்திம மனிதன்.
‘‘அப்ப சரி... உடனே அதை ஏவு...’’
‘‘ஆனா..?’’
‘‘என்ன ஆனா ஆவன்னா..?’’
‘‘அதை ஏவினா ஐந்து பேரோட உயிரைப் பறிக்காம திரும்பாதே...’’
‘‘தெரியும்... அதனாலதான் ஏவச் சொல்றேன்... செய்...’’ என்று கத்தினான் குள்ளன்.
அடுத்த கணமே பிரும்மாஸ்திரத்தை எரிகல் மனிதனை நோக்கி ஏவினான் மத்திம மனிதன்.
‘‘இந்தாங்க ருத்ரனோட இதயம்... இதை வச்சு என்ன செய்யப் போறீங்க?’’ கேட்ட ஃபாஸ்ட்டை உற்றுப் பார்த்த ரவிதாசன், ‘‘பூஜை செய்யப் போறேன்...’’ என்றான்.
‘‘என்ன பூஜை..?’’ சூ யென் குரலில் ஆவல் தெரிந்தது.
‘‘அதர்வண வேத பூஜை... ஆதித்த கரிகாலனை கொல்றதுக்கு முன்னாடி இந்த வழிபாட்டைத்தான் மேற்கொண்டோம்...’’
‘‘எங்க?’’
‘‘திருப்பதில...’’
‘‘பெருமாள்கிட்டயா வேண்டினீங்க?’’ நம்ப முடியாத அதிர்ச்சியுடன் ஆனந்த் கேட்டான்.
‘‘திருப்பதின்னா பெருமாள்தானா..?’’
‘‘அப்ப..?’’
‘‘அலர்மேல்மங்கைத் தாயார்கிட்ட வேண்டிக்கிட்டோம்... பூஜை செஞ்சோம்... உண்மைல அவ அதர்வண வேத காளி...’’ அதன் பிறகு ரவிதாசன் எதுவும் பேசாமல் தன் கண்களை மூடிக்கொண்டு  தியானத்தில் ஆழ்ந்தான். அவன் மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க, ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்திருந்த பாலாவின் உடல் அதிர ஆரம்பித்தது. கூடவே அவள் கைகளில் இருந்த ருத்ரனின்
இதயம், முன்பை விட அதி வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது...
அனைவரும் வைத்த கண் வாங்காமல் ருத்ரனையும், பாலாவையுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரேயொருவனைத் தவிர. அவன் மனம் மட்டும், ‘கர்ணன்கிட்டேந்து கவசத்தை இந்திரன் வ ங்கினான்... அதை ஆதித்த கரிகாலன்கிட்ட கொடுத்தான். ஆதித்த கரிகாலன் அதை யார்கிட்ட கொடுத்தான்..? கவசம் இப்ப எங்க இருக்கு..?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.
அவன், ஆனந்த்.
ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்த துரோணர், சட்டீஸ்கர் பகுதியை விநாடிக்கும் குறைவான நேரத்தில் உற்றுப் பார்த்தார். பிறகு, தான் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்தார்.
இதற்காகவே காத்திருந்தது போல் விதுரரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
பரத்வாஜ முனிவரின் சிற்ப ரகசியமும் மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது...
(தொடரும்)

‘‘அக்கம் பக்க கிசுகிசுக்களை காலையில வர்ற வேலைக்காரி சொல்லிடறா... அப்புறம் எதுக்கு சாயந்திரம் இன்னொரு வேலைக்காரி?’’
‘‘புரியாத கிசுகிசுக்களை அவ புரியும்படி விளக்குவா...’’

‘‘எதுக்கு அவசரம் அவசரமா கட்சியில மகளிரணிக்கு ஆள் சேர்க்கறீங்க..?’’
‘‘அது இருந்தா, தலைவர் கட்சியை அவ்வளவு சுலபத்துல கலைச்சுட மாட்டாரே!’’

‘‘தலைவர் எந்த நேரமும் போலீஸ் கைது செய்துடும்ங்கற பயத்துல இருக்கார்னு
எப்படிச் சொல்றே?’’
‘‘டிரெயின்ல தூங்கிட்டு இருந்தவரை டி.டி.ஆர் எழுப்பி டிக்கெட் கேட்டதும், ‘வாரன்ட் இருக்கா’ன்னு உளர்றார்!’’