தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்சி தாவினவங்களை மீட்டுத் தரும்படி கோர்ட்ல கேஸ் போட்டிருக்காரே..!’’


- பெ.பாண்டியன், காரைக்குடி.


‘‘தலைவர் மேல ஜட்ஜ் ஏன் கோபமா இருக்கார்..?’’
‘‘கோர்ட்ல குற்றவாளிக் கூண்டுல நின்னுக்கிட்டு ‘கூண்டோட கட்சி மாறுவேன்’னாராம்..!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
‘‘பிரதமராகற கனவோட டெல்லிக்கு
ரயிலேறினவர்
நம்ம தலைவர்...’’
‘‘அப்புறம் ஏன் ஆகலே..?’’
‘‘ரயில் அங்கே
நிக்காம
போயிருச்சாம்..!’’

- சி.சாமிநாதன்,
கோயம்புத்தூர்.


‘‘யா ருடைய தயவும் இல்லாம 40 தொகுதிகளிலும்...’’
‘‘ஜெயிக்க முடியும்னு சொல்றீங்களா தலைவரே..?’’

‘‘நீ வேற... நிக்க முடியும்னு சொல்ல வந்தேன்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

எவ்வளவு பெரிய பலசாலியா இருந்தாலும், முதுகு அரிச்சா கையால சொறியலாம்; கை அரிச்சா முதுகால சொறிய முடியுமா?
- பதில் சொல்ல முடியாத கேள்விகளை, தோல் டாக்டருக்கு தினமும் பார்சல் செய்வோர் சங்கம்

- அனார்கலி, தஞ்சாவூர்.


‘‘தூங்கி எழுந்த மன்னர் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்..?’’
‘‘போரில் வெற்றி பெறுவதுபோல் கனவு வரும் சமயத்தில் எழுப்பி விட்டார்களாம்...’’

- மு.மதிவாணன், அரூர்.


ஹனிமூனுக்கு டார்ஜிலிங்தான் போகணும்னு அவசியம் இல்ல... ஆனா ‘டார்லிங்’ அவசியம்!
- மேரேஜ் லைஃப் பற்றி டபுள் ரூம் போட்டு சிங்கிளாய் இருந்து யோசிப்போர் சங்கம்

- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.