நியூஸ் வே



*கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகான உத்தம வில்லன், மொத்தமாக காமெடி ரகம். ரமேஷ் அரவிந்தும், கமலும் சேர்ந்து, சிரித்து சிரித்து சீனை உருவாக்குகிறார்கள். ‘சதி லீலாவதி’ படத்தை மனதில் வைத்து, ஆனால் இன்னும் காமெடியாக படத்தின் ஸ்கிரிப்ட்டை தீட்டுகிறார்கள். முழுக்க ஸ்கிரிப்ட் ரெடியான பிறகுதான் ஷூட்டிங் புறப்படுகிறார்கள்.



‘ஆரம்பம்’ படத்தில் அட்டணக்கால் போட்டு அஜித்தை மிரட்டிய அழகு குதிரை அக்ஷரா, அடிப்படையில் வாலிபால் பிளேயர். தேசிய அளவில் நடந்த போட்டிகளில் கோப்பைகளை வென்றவருக்கு, சினிமா என்பது சின்ன வயசு கனவு. இதற்காக முறைப்படி பரத நாட்டியமெல்லாம் கற்றுக்கொண்டாராம்.

*மறுபடியும் ஹாரிஸ் ஜெயராஜ்-கௌதம் மேனன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. இருவரின் நண்பர்களும் பேசிக்கொண்ட பிறகு, ஹாரிஸ்-கௌதம் மீட்டிங் நடக்குமாம். என்ன, எல்லைப் பிரச்னையா பேசப் போறீங்க?



*தமிழ், தெலுங்கு மலையாளம் - மூன்று மொழிகளிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் இயக்குனர்களின் சாய்ஸ் நித்யா மேனன் என்றே இருக்கிறது. எல்லா இயக்குனர்களுக்கும் விருப்ப நடிகையாக இருக்கும் நித்யாவுக்குள்ளும் இயக்குனர் ஆசை ஒளிந்திருக்கிறதாம்.


சினிமா ஷூட்டிங் நடக்கும் பின்னி மில்லில் ஒரு ஃபுளோருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை. இரு வாரங்களுக்கு முன் ‘வீரம்’ படத்தின் ஷூட்டிங் அங்கு நடந்தது. மற்ற படங்களின் ஷூட்டிங் நடந்தால் தனக்கு இடையூறாக இருக்கும் என்று ஃபீல் பண்ணிய அஜித், பின்னி மில்லின் அனைத்து பகுதிகளையும் வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் நடத்தச் சொன்னாராம். இதற்காக ஒரு நாள் வாடகையாக 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

*அஞ்சலி ‘அம்மா’வைப் பார்க்க மனுப் போட்டு இருக்கிறாராம். பாதுகாப்புக்கும், இங்கேயே பிரச்னையே இல்லாமல் இருப்பதற்கும் வேண்டுகோள் தரவே... இந்த விண்ணப்பம். தயாரிப்பாளர்கள் அஞ்சலி பக்கமே போக மறுப்பதால், அவர்களை சமாதானத்திற்குக் கொண்டு வரவும் இது உதவும் என நினைக்கிறாராம்.

*அடுத்து செல்வராகவன் படம் விஷாலை வைத்துத்தான். ஸ்கிரிப்ட் ரெடியாவதற்குள் ‘திரு’வின் டைரக்ஷனில் நடித்து முடித்து விடுகிறார் விஷால். அவரின் அடுத்த சொந்தப் படத்தில் ஜெய் நடிக்கிறார்.

*இந்த வருஷம் யுவன்ஷங்கர் ராஜாவின் கேரியர் கிராஃப் பயங்கர டவுன் ஆகிவிட்டது. காலையில் ஸ்டுடியோவில் யுவன் கிடைப்பதில்லை என்பதுதான் முக்கிய காரணம். முன்பெல்லாம் இளையராஜாவின் கார் காலை ஏழு மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவில் நுழைவதைப் பார்க்க கூட்டம் கூடும். அவருக்கு இருந்த டைமிங் யுவனுக்கு மிஸ்ஸிங்!

சைலனஸ்

நட்பு நடிகை வாயும் வாந்தியுமாக இருக்கிறார் என்று மீடியாவில் கசிந்த செய்தியால் கணவர் எரிச்சலாகி இருக்கிறார். ‘‘அப்பா-அம்மா ஆகுறது பத்தி நாங்களே இன்னும் முடிவு செய்யாதபோது மத்தவங்க ஏன் எங்க சொந்த மேட்டரில் மூக்கை நீட்டணும்’’ என்று போனில் பிரசன்னமாகி கொதிக்கிறாராம். மேடத்துக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருப்பதால், அம்மா ஆகாமல் இன்னும் கொஞ்ச நாளைக்கு சும்மாதான் இருப்பாராம்!

மாவட்டம் பெயர் கொண்ட படத்தை வெளியிடுவதற்கு முன்னர் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கிறார் நடிகர். அது பிரச்னை தருமானால், எல்லோரிடமும் போனிலாவது பேசி விடத் தீர்மானித்திருக்கிறாராம். படத்தில் அரசியல் பற்றி ஒரு வார்த்தை கூட புழங்கக் கூடாது என்று மொத்தமாகக் கட்டுப்பாடு. ‘இவ்வளவு முன்யோசனையா?’ என வியந்தாராம் பக்கத்து ஊர் நடிகர்.
லேட்டஸ்ட் பியூட்டி படமும் சரியாகப் போகாததால், கொஞ்சம் கவலையில் ஆழ்ந்துவிட்டார் நடிகர். இனிமேல் கதையை அப்பாவும் கேட்பது என முடிவாகி இருக்கிறது. சகோதரரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார். இனி எடுத்து வைக்கும் அடியில் தப்பு வந்திடக்கூடாது என்பதுதான் உச்சகட்ட தீர்மானமாம்.

சஞ்சிதா ஷெட்டி ஃபீல்டுக்கு வந்து 7 வருஷமாகிறது. தங்கை, தோழி கேரக்டர்களிலிருந்து மெல்ல மெல்ல ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். உங்களுக்கு துளு மொழி தெரிந்தால், சஞ்சிதா மனசில் இடம் பிடித்துவிடலாம். யெஸ், அவரது தாய்மொழி துளு.

*சண்முக பாண்டியன் அடுத்த வருஷம்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான். மகனுக்காக விஜயகாந்த் கிடைத்த நேரங்களில் எல்லாம் ஸ்கிரிப்ட் கேட்கிறார். ஹிட்டான தெலுங்கு படங்களின் சி.டிக்களும் வந்து குவிந்திருக்கின்றன. வாங்க... புது கேப்டன்!

*அனிருத் சினிமாவில் நடிப்பதாக இருந்து, ‘ஜிம்’மிற்குப் போய் ‘ஜம்’மென்று பாடியை தூக்கி நிறுத்த திட்டம் போட்டிருந்தார். இரண்டு மாதங்கள் இரவு பகலாக பழியாகக் கிடந்தும் ஒரு ‘இன்ச்’ கூட முன்னேற்றம் இல்லையாம். ‘சரிப்பட்டு வராது’ என்று பின்வாங்கிவிட்டார் அனிருத். ரஜினி ஃபேமிலியும் இதற்கு ஆதரவாம். பேசாமல் ரெக்கார்டிங் ஸ்டூடியோவே போதும் என முடிவு செய்திருக்கிறார் அனிருத்.

*அஜித், விஜய் போன்ற ஹிட் லிஸ்ட் ஹீரோக்கள் படமென்றால் மட்டும் கதை கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுக்கும் முன்னணி ஹீரோயின்கள், இப்போது சிவகார்த்திகேயன் படமென்றாலும் ‘பிடிங்க தேதியை’ என்று ரெடியாகி விடுகின்றனர். ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னாவும் சிவகார்த்தியுடன் ஜோடி சேர்கிறாராம். லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் தமன்னாதான் நாயகி.

*நஸ்ரியா எல்லா முக்கிய நடிகர்களுக்கு போன் பேசி விட்டார். ‘‘உங்கள் படத்தில் எனக்கு கேரக்டர் இருந்தால் நிச்சயமாக நடிக்கிறேன். ஒத்துழைப்பு தரமாட்டேன் என்பது மாதிரி என்னைப் பற்றி செய்தி பரவி விட்டது. அப்படியில்லை’’ என நெகிழ்ச்சியாகச் சொல்கிறாராம். ‘சரி’யென சொல்லி வைத்திருக்கிறார்கள் ஹீரோக்கள்.

*பெயர் அறியாத எண் ஒன்று சுசீந்திரனின் செல்போனில் மினுக்கிட, எடுத்துப் பேசினார் டைரக்டர். எதிர்முனையில் நடிகர் விஜய், ‘‘எனக்கு ‘பாண்டிய நாடு’ ரொம்பப் பிடிக்குது. அடுத்து எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் கொண்டு வாங்களேன்’’ என்றிருக்கிறார் விஜய். எது செய்தாலும் உங்களுக்குப் பிடிக்கணுமே!