ஜோக்ஸ்



கட்சி பேச்சாளரை எங்க படத்துல வசனம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்...
என்னாச்சு?’’
‘‘சென்சார்ல மொத்த வசனத்தையும் கட் பண்ணிட்டாங்க!’’
பா.ஜெயக்குமார், வந்தவாசி.

தன் வீட்டுக்கு ரெய்டுக்கு வரும் சி.பி.ஐ ஆபீஸர் யாருக்கும் சுகர் இருக்கக்கூடாதுன்னு தலைவர் ஏன் கண்டிஷன் போடறாரு..?’’
‘‘அவங்களுக்கு அல்வா கொடுக்க ஆசைப்படறாராம்...’’
- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.

 தலைவர் சிலையை செஞ்சவங்களுக்கு பேசினபடி பணம் குடுக்கலையா?’’
‘‘ஏன்... என்ன ஆச்சு?’’
‘‘அவர் குற்றவாளிக் கூண்டுல நிக்கற மாதிரி சிலை செஞ்சுட்டாங்க!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘மன்னா... தங்களைப் புகழ்ந்து பாட வார்த்தைகளே இல்லை!’’
‘‘கூகுளில் ‘சர்ச்’ பண்ணிப் பாக்கறதுதானே புலவரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

நர்ஸ்! நாலாம் நெம்பர் பெட்ல இருக்கற பேஷன்ட்டுக்கு உடம்புக்கு என்னன்னு கண்டுபிடிச்சீங்களா..?’’
‘‘முதல்ல அவரையே கண்டு
பிடிக்க முடியலை சார்! எங்கயோ ஓடிட்டாரு...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

மேடையில யார் அவர்? எதுக்காக நம்ம தலைவர் அவருக்கு பரிசு கொடுக்கறார்..?’’
‘‘2013ல அதிக மீட்டிங்ல கலந்துக்கிட்டு, தலைவரோட பேச்சுக்கு சிறப்பா கைதட்டல் கொடுத்தவராம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

கபாலி எப்படிப்பட்ட ஆளு ஏட்டய்யா?’’
‘‘தரத்துல தங்கம் சார்... தர்றதுல வைரம் சார்!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.