ஜோக்ஸ்



ஸ்பீக்கரு...

‘‘இது மினிஸ்டர் வீடுன்னு எப்படிக் கண்டுபிடிச்ச..?’’
‘‘வாசல்ல ‘குனிவே துணை’ன்னு போட்டிருக்கே!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

‘‘தலைவருக்கு எதுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க..?’’
‘‘தலைவரோட கையெழுத்தும் புரியாத மாதிரியே இருந்துச்சாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘இன்றைக்கு தலைவர் பேசவே மாட்டார் என்று உத்தரவாதம் கொடுத்தும் நீங்கள் யாரும் வரவில்லையென்றால், இதற்கு மேல் என்ன சொல்லி உங்களை வரவழைப்பது என்று எங்களுக்கே விளங்கவில்லை...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘செயல் சிங்கங்களே... சரக்கை சோடா கலந்துதான் என்றில்லை. ராவா அடிக்கவும் நாம தயாரா இருக்கணும்!’’
‘‘புரியுது தலைவரே... கூட்டணி அமையாது போனா, நாம தனியா நிற்கவும் தயாரா இருக்கணும்னு சொல்ல வர்றீங்க!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘கட்சிக்காரங்களோட உண்ணாவிரதத்தை பழச்சாறுக்கு பதில் டானிக் குடுத்து முடிச்சி வைக்கச் சொல்றாரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘வீட்டு பீரோ சாவியை
எங்க வச்சிருக்கீங்க...
மரியாதையா சொல்லிடு!’’
‘‘இதையேதான் பத்து வருஷமா நானும் என் பொண்டாட்டிகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவரே... இப்ப நீங்க சினிமாவுல இல்ல, அரசியல்ல இருக்கீங்க!’’
‘‘அதுக்கு என்னய்யா..?’’
‘‘தேர்தல்ல உங்களுக்கு டிக்கெட் தரலேன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டதுக்கு, ‘பிளாக்’ல டிக்கெட் வாங்குவேன்னு சொல்றீங்களே!’’
- உ.குணசீலபாண்டியன்,
ராஜபாளையம்.