ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெனிபர் அனிஸ்டன் & ஜஸ்டின் தெராக்ஸ் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது ஜெனிபர் கையில் அந்த நிச்சய மோதிரம் மிஸ்ஸிங். இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவியது. ‘‘மோதிரத்தை சுத்தம் செய்வதற்காக கழற்றினேன். அதற்கு இப்படியா பேசுவது?’’ எனக் கடுமையாக கொந்தளித்திருக்கிறார் ஜெனிபர்.

அன்புத் தந்தையை இழந்து தவிக்கிறார் நிக்கோல் கிட்மேன். ‘‘இந்தத் துயரத்திலிருந்து மீள்வதற்கு கணவர் கீத் அர்பன் ரொம்பவே உதவினார். எனக்கு ஆறுதல் சொல்லி, கிட்டத்தட்ட என்னை உள்ளங்கையில் தாங்கித் தேற்றினார். அவரது ஆதரவு இல்லை என்றால் நொறுங்கிப் போயிருப்பேன்’’ என உருகுகிறார் நிக்கோல்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், கணவர் சித்தார்த் ராய் கபூரின் உணவு விஷயத்தில் தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொள்கிறார் வித்யா பாலன். தினமும் அவரது ஆபீஸுக்கு வீட்டிலிருந்து சாப்பாட்டை அனுப்பி வைத்துவிட்டே ஷூட்டிங் போகிறார் வித்யா. அவர் வெளியூர் போனாலும், ‘என்ன டயட்’ என சமையல்காரர்களுக்கு போனில் உத்தரவுகள் வந்துவிடும்.

‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பும், படம் வெளியான பின்பும் பல நகரங்களுக்குப் பறந்து பறந்து பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் ஷாருக் கானும் தீபிகா படுகோனேவும். ஒரு நிகழ்ச்சிக்கு அட்டகாசமான அனார்கலி டிரஸ்ஸில் தீபிகா வந்தார். ‘‘டிரஸ் ஓகே. ஆனால் இவ்வளவு டிரஸ் அணிந்து உடலை மூடிக்கொண்டு வர வேண்டுமா? போட்டோக்கள் கிளாமராக இருக்க வேண்டாமா?’’ என ஷாருக் கேட்டதில் அவர் படு அப்செட்!

முதல் முறையாக தயாரிப்பாளர் ஆன சந்தோஷத்தில் மிதக்கிறார் அனுஷ்கா சர்மா. அவர் தயாரித்து நடிக்கும் ‘என்ஹெச்10’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ். படம் நன்றாக வந்திருப்பதில் திருப்தியாக இருக்கும் அனுஷ்கா, இந்தப் படத்தின் இயக்குனர் நவ்தீப் சிங் உட்பட இதே யூனிட்டை வைத்து அடுத்தும் ஒரு படம் தயாரிக்கிறார்.