facebook வலைப்பேச்சு



ரொம்ப நேரம் அறுவை போட்டுக்கிட்டு இருக்கிற ஆளுகள கழட்டிவிட ஒரு அருமையான சீசன் ஐடியா! # லைட்டா கண்ண கசக்கி விட்டு, ‘‘கண்ணு சிவப்பா இருக்கா’’ன்னு பாருங்கன்னு அவங்ககிட்டயே கேளுங்க. 10 செகண்டுக்கு மேலே நிக்க மாட்டாங்க. இப்போதான் செக் பண்ணுனேன் இந்த டெக்னிக்க!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

ஒருத்தருக்குக் கூட நம்ம கண்ண பார்த்து பேசற தைரியம் இல்ல...
  # ‘மெட்ராஸ் ஐ’ அப்டேட்!
- கடங்கநேரி யான்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; மக்களின் முதல்வர் ஜெயலலிதா. தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்; மக்களின் தலைமைச் செயலாளர் ஷீலா பால
கிருஷ்ணன்; டி.ஜி.பி அசோக்குமார்; மக்களின் டி.ஜி.பி ராமானுஜம்...
# சரி.. நாமெல்லாம் மக்களா? மக்களின் மக்களா?
- கோவி லெனின்

எல்லா டாஸ்மாக் பார்லயும் நடுமண்டைல கொம்பு மொளச்சவங்க ரெண்டு பேரு ரெகுலர் கஸ்டமரா இருக்கத்தான் செய்யுறாங்க, ‘சில்ற பத்து இருந்தா குடுங்க!’, ‘தண்ணி கேனை எடுத்துக்கட்டா’ என்று கேட்க!
- வா.மு. கோமு

சென்னைல இன்னும் ரெண்டு மழை பெய்ஞ்சா போதும்... பிரிட்டிஷ்காரன் போட்ட ரோடெல்லாம் வெளிய தெரிய ஆரம்பிச்சுரும்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

எதுவும் எழுதாமலே நாட்களைப் புரட்டிச் செல்லும் காற்று, ஏதோ ஒரு நாளை மட்டும் அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது.
- சுந்தரி விஸ்வநாதன்

ஹீரோயின்ஸ் உருண்டு புரண்டு ஆடிக்கொண்டிருக்க, ஹீரோ குறுக்கே மறுக்கே நடந்து கொண்டிருந்தால் அது விஜயகாந்த் படம்; ஹீரோ உருண்டு புரண்டு ஆடிக்கொண்டிருக்க, ஹீரோயின் குறுக்கே மறுக்கே நடந்து கொண்டிருந்தால் அது விஜய் படம்!
- ஸ்ரீப்ரியா எஸ்பி

திரும்புதல் குறித்து கவலைப்படுகின்ற பயணங்கள் அத்தனை சுகப்படுவதில்லை.
ரேவா பக்கங்கள்

உண்மை எந்த ஷாப்பிலும் கிடைக்காது; ஆனால் பொய், போட்டோஷாப்பில் கிடைக்கும்!
சித்தன் கோவை

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட ராஜீவ் காந்தி காலத்துலயே காங்கிரச விட்டுட்டு சிவாஜி கட்சியில் இருந்த சிங்கம்தான்!
# வரலாறு முக்கியம் தலைவரே...
 ஜோதிபாரதி ராமலிங்கம்

சத்தியமூர்த்தி பவனுக்கும் சரவணபவனுக்கும் உள்ள ஒற்றுமை... உள்ளே போனா ஏகப்பட்ட வெரைட்டி இருக்கும்!
 வெங்கடேஷ் ஆறுமுகம்

வீட்டுக்கு வந்த சொந்தக்காரனுக்கு சோறு போடலன்னாலும் டீ, காபியாவது கொடுத்துட்டு இருந்தாய்ங்க... இனி அதுவும் போச்சா?
மதன் செந்தில்

என் முகமூடிக்குள்
இருக்கும் முகத்தை
நானும் பார்த்ததில்லை.
- ராஜா சந்திரசேகர்

twitter

@FrancisPichaiah
வாழ்க்கையும் ஓர் கண்ணாடிதான்... அதைப் பார்த்து நாம் புன்னகைத்தால் அதுவும் புன்னகைக்குமே!

@karunaiimalar
நூறு கிலோ அரிசி மூட்ட தூக்குறவனுக்கு அத வாங்க தெம்பில்ல; அத காச கொடுத்து வாங்குறவனக்கு தூக்க தெம்பில்ல!

@ineyaval   
தங்கம் வாங்கித் தர முடியாமல் கவரிங் தோடு கையில் வைத்துக் கொண்டு ‘‘தங்கத் தோடு தோத்துரும்’’ எனச் சொல்லும் அம்மாவின் சமாதானம் தங்கத்தை விட பெரியது...

@rcbabu1 
டெல்லியில் 45 தொகுதிகளில் ஜெயிப்போம்: கெஜ்ரிவால்
# ஏன், இதுவரை உடச்சதெல்லாம் போதாதா? ஃபர்னிச்சர்ல கைய வெச்சே, மொத டெட் பாடி நீதான். சொல்லிப்புட்டேன்!

@Alexxious   
கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து விடுவது எளிதாய் இருக்கிறது, வாழ்வது தான் கஷ்டமாய் இருக்கிறது!

 @ThePayon
பள்ளிப் பருவ குரூப் போட்டோ ஒன்று கிடைத்தது. அதில் நீண்ட நேரமாய் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சுயதேடல் இவ்வளவு கடினமா?

@SENTHILwin 
உப்புமா என்பது உணவுத் தீவிரவாதம்!

@VignaSuresh
தனக்குப் பிடித்தமானவற்றை
மட்டும் பேசும் ஒன்றிரண்டு
பேர் இல்லையென்றால், பல மனிதர்கள் காதை அறுத்துக்
கொண்டிருக்கக்கூடும்.

@Tottodaing   
கோடி ரூபாய பதுக்குனாலும் கூட பரவால்ல... ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை எல்லாம் பதுக்கி, ஏன்யா தினமும் சாக்லெட் திங்க வுடுறீங்க?

 @mrithulaM 
ஒரு சிறு மெனக்கெடலினால் தவிர்த்திருக்கலாம் ஒரு பிரிவை, ஒருவரின் கண்ணீரை, ஒருவர் புறக்கணிக்கப்
படுவதை, நம் மீதான பேரன்பு வற்றிப்போவதை!

@Ini_avan
  உலகின் எந்த மூலையிலாவது அநியாயம் நடந்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல், உடனே ஓடிச் சென்று வேடிக்கை பார்ப்பதற்காக உருவானதே ஐ.நா. சபை!

@nizamdheen10   
கலாய்ப்பதற்கு இன்னொரு கட்சியும், தலைவரும்
கிடைக்கிறார் என்பதை விட, வேறென்ன நன்மை மக்களுக்குக் கிடைத்து
விடப் போகிறது புதுக்கட்சி ஆரம்பிப்பதால்?

@VenkysTwitts
ஆபீஸ் மீட்டிங்ல யாரோ ஒருத்தர் போன்ல சத்தமா அடிக்கற அந்த ரிங்டோன்தான், நம்ம போன சைலென்ட்ல மாத்திக்க அவர் நமக்கு கொடுக்கற அலாரம் டோன்!

@g_for_Guru   
வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும் சைனா பொம்மையின் பேட்டரி காலி எனக் கேட்ட தகப்பன்.
# என்னா சத்தம்!

@nizamdheen10   
‘‘டீசல் விலைதான் குறைந்திடுச்சே... அப்புறம் ஏன் ஆட்டோகாரண்ணே கூட்டி கேட்கிறீங்க?’’
‘‘பால் விலை கூடுன விஷயம் உங்களுக்குத் தெரியாதா?!’