ஜோக்ஸ்



‘‘தொகுதி மக்களுக்கு உதவ முடியாம நான் இப்படி ஜெயிலுக்கு வந்துட்டேனேய்யா!’’
‘‘கவலைப்படாதீங்க தலைவரே... நீங்க ஜெயிலுக்கு வந்ததே, அவங்களுக்கு உதவின மாதிரி தான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘செல்ஃபி எடுத்த மன்னர் ஏன் சோகமாகி விட்டார்..?’’
‘‘செல்ஃபியில் பார்த்தபோது, மன்னருக்குப் பின்னால் மகாராணியும் அமைச்சரும் கைகோர்த்து நின்றிருப்பது தெரிந்ததாம்!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

பிள்ளைகளுக்கு முனியாண்டி, பழனியாண்டி, மூக்காண்டின்னு எல்லாம் பேரு வைப்பாங்க. யாரும் ‘பூச்சாண்டி’ன்னு பேரு வைக்க மாட்டாங்க!
- ஆஸ்தி நிறைய இருந்தாலும் அனுபவிக்காமல்
ஆண்டியாய் அலைவோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

வுட் ஸ்டிக், ஸ்டீல் ஸ்டிக்கை ஊன்றுகோலா வச்சு நடக்கலாம்... ஆனால் எலாஸ்டிக்கை ஊன்றுகோலா வச்சு நடக்க முடியுமா?
- தத்துவத்தை ஃபென்டாஸ்டிக்கா சொல்லி ஜிம்னாஸ்டிக் செய்வோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘தனக்கு பொன்னாடை போர்த்தின தொண்டனை தலைவர்
ஏன் கண்டபடி திட்டறார்..?’’
‘‘சால்வையோட விலையை மைக்ல
சொல்லிட்டானாம்!’’
-சரவணன், கொளக்குடி.

‘‘டாக்டர்,
பைக் சைலன்சர் கையில
சுட்டுடுச்சு...’’
‘‘டாக்டர்
கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.
இதைப் பார்த்தா, சமைக்கும்
போது குக்கர் சுட்ட மாதிரி இருக்கே?!’’
- வி.எம்.ராஜன், மதுரை.

தலைவரே!
நீதி
செத்துப் போச்சு...’’
‘‘விடுய்யா... எல்லாரும் ஒருநாள்
போறவங்கதானே!
 அ.ரியாஸ், சேலம்.