தத்துவம் மச்சி தத்துவம்



எதுக்கு டாக்டர் எக்ஸ்ரே எடுக்கப் போகும்போது வயித்துல றி.ஜி.ளின்னு எழுதறீங்க..?’’
‘‘உங்களுக்கு முதுகுலயும் எக்ஸ்ரே எடுக்கணும்... அதான்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தயாரிபபாளர் நிறைய கடன் வாங்கி இந்தப் படத்தை எடுத்திருப்பாரோ..?’’
‘‘ஏன் கேட்கறீங்க?’’
‘‘போஸ்டர்ல ‘வறுமையுடன் வழங்கும்’னு போட்டிருக்காரே!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘தலைவரே... இனிமே நீங்க குடிச்சிட்டு மேடைக்கு வரக்கூடாதுன்னு மக்கள் சொல்றாங்க!’’
‘‘வந்தா என்ன பண்ணுவாங்களாம்..?’’
‘‘செருப்புக்கு பதிலா காலி பீர் பாட்டிலை எடுத்து உங்க மேல வீசுவாங்களாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஐகோர்ட், சுப்ரீம்
கோர்ட்லயெல்லாம் நிறைய
வழக்குகளை தள்ளுபடி

பண்ணறாங்க. அந்த தள்ளுபடி 20
சதவீதமா 30 சதவீதமான்னு சொல்றது
இல்லையே, ஏன்?
- கோர்ட்டில் உள்ள வழக்குகளை நினைத்துக்கொண்டே கோ-ஆப்டெக்ஸில் துணி எடுப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘புதுப் படத்துக்கான ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘ஊழல் கதையா சொல்றார்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அந்த பத்தாம் நம்பர் பேஷன்ட்டுக்கு நினைவு முன்னே இருந்ததைவிட நல்லா திரும்பிடுச்சுன்னு எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்?’’
‘‘கண் முழிச்ச உடனே ‘நான் எங்கே இருக்கேன்’னு கேட்காம, எல்லா நர்ஸ்களோட பேரையும் கட கடன்னு சொல்றாரே!’’
- மு.மதிவாணன், அரூர்.

என்னதான் படு வேகத்துல பேயை
ஓட்டினாலும் ‘ஓவர் ஸ்பீடு’ன்னு பேய் ஓட்டறவரை கைது பண்ண முடியாது!
- வேகமாய் போய் வேகத்தடையில் விழுந்து கிடப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.