தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் எவரெஸ்ட் சிகரம் ஆனாலும், அங்கே போய் எவரும் ரெஸ்ட் எடுக்க முடியாது!
- எவர் பேச்சுக்கும் அடங்காத எனி டைம் ரெஸ்ட் பாய்ஸ்
- பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.

‘‘இப்படி அருள் வந்த மாதிரி கத்தறாரே... நம்ம தலைவருக்கு ‘அம்மன்’ வந்துருக்கா?’’
‘‘இல்லை... கோர்ட்ல இருந்து ‘சம்மன்’ வந்துருக்கு...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.



‘‘ஆஸ்பத்திரி பக்கத்தில இருக்கிற அந்த மரத்தடி ஜோசியர்கிட்ட மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் இருக்கு?’’
‘‘எந்தெந்த ஆஸ்பிட்டல்ல எந்தெந்த நர்ஸ் இப்ப டியூட்டியிலே இருக்காங்கன்னு கரெக்டா சொல்றாராம்!’’
- மு.மதிவாணன், அரூர்.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவர் மீது செருப்பு வீச வந்திருப்போர் எங்கள் கட்சியின் செருப்புக்குழு தலைவரிடம் முறையாக பெயர் பதிவு செய்து அனுமதி வாங்கி வீசுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...’’
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘வீட்டு வேலையைத் தவிர, அக்கம்பக்க வம்புகளையும் விசாரிச்சுச் சொல்லணும்னு புதுசா வேலைக்கு சேர்ந்த வீட்டில் மறைமுகமா  சொல்லிட்டாங்களா... எப்படி?’’
‘‘கூடுதல் பொறுப்பா, வெளியுறவு இலாகாவையும் ஒப்படைக்கிறோம்னு சொன்னாங்களே!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘அந்த பேஷன்ட்டுக்கு மூட்டு எப்படி தேய்ஞ்சுதாம் டாக்டர்..?’’
‘‘பத்து வருஷமா நம்ம ஆஸ்பத்திரி நர்ஸை ஃபாலோ பண்ணி நடையா நடந்ததாலயாம்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவரோட பெட்ரூம் ஜன்னல் கம்பி ஏன் வளைஞ்சிருக்கு..?’’
‘‘குடும்பச் சிறையில இருந்தும் தப்பிக்க முயற்சி பண்ணியிருக்கார்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.