கெமிஸ்ட்ரி டீச்சர்!



கலாம் ஐயா போலவே உருவ ஒற்றுமை கொண்ட ‘உடுமலை கலாம்’ அவர்களுக்கும் எங்கள் சலாம். கலாம் கண்ட கனவை நிறைவேற்றும்  தெம்பும் உறுதியும் இவர் பெற வாழ்த்துவோம்!
- எஸ்.சிநேகா, சென்னை.

அடடா... நயன்தாரா எல்லா ஆங்கிளிலும் அசத்துறாரே! ஜெயம் ரவியுடன் என்ன... யாருடனுமே அவருக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்  ஆகும். தமிழ் சினிமாவின் கெமிஸ்ட்ரி டீச்சரே அவர்தானய்யா!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.



சமூக வலைத்தளங்கள் சமூகப் பிரச்னைகளை அலசும் தளங்களாக மாறி வருவது அருமை. பாதரசம் சூழ்ந்த கொடைக்கானல் மீண்டும்  சுத்தமாகி, பனி சூழ்ந்த பிரதேசமாக மாறட்டும்!
- ஜி.சின்னகண்ணு, வேலூர்.

சத்யராஜ் சாதாரணமாகவே எல்லாப் படங்களிலும் பின்னியெடுப்பார். இப்போ ஃபேன்டஸி பேயா வந்து லொள்ளு பண்ணப் போறாரா!  ஏனுங்... காத்திருக்கோம்ங்..!
- மு.மதிவாணன், அரூர்.

‘மாணவனை தொழிலதிபராக்கிய ஃபேஸ்புக்’ கட்டுரை அபாரம். சவுக்கு உற்பத்தியில் சத்தமின்றி ஒரு சாதனை புரிந்துகொண்டிருக்கும்  சக்திவேலுக்கு எங்கள் லைக்ஸ் பல!
- இரா.வளையாபதி, கரூர்.

‘லிங்கா’ பட விஷயத்தில் ரஜினிக்கு நேர்ந்தது எல்லா நடிகர்களுக்குமே பாடம் என இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியான  வார்த்தை!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

‘குப்பை மலைகளில் புதையும் நகரங்கள்’ நிதர்சன உண்மையின் வெளிப்பாடு. நகரங்களின் குப்பைகளை சரியாக நிர்வகிக்க அரசுதான்  தொலைநோக்குத் திட்டமிட வேண்டும்!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

சுந்தர் பிச்சைக்கு முன்பே உலக நிறுவனங்களை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள் பற்றிய விபரமும் அதற்கான காரணங்களும் மலைக்க வைத்தன.
சிந்திக்கவும்தான்!
- எஸ்.இளங்கோவன், தஞ்சாவூர்.

‘அப்பா சுட்ட தோசை’... பெயரே பசியைத் தூண்டுகிறதே! பசி.com மெனுவே ‘சப்பு’ கொட்ட வைக்கிறதே! எங்கே விரட்டிப்  பிடிக்கிறீர்கள்... இப்படி வெரைட்டி ஹோட்டல்களை?
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.

வாரா வாரம் நாஞ்சில் நாடனின் ‘கைம்மண் அளவு’ சமுதாய அவலங்களை இயல்பாய் தோலுரித்துக் காட்டுகிறது. பாராட்டுகள்!
- பாபு கிருஷ்ணராஜ், கோவை-2.

என்னதான் ‘விநோத ரஸ மஞ்சரி’யாக இருந்தாலும் நாயை மணக்கும் பெண்ணா? டோமினிக் பற்றிப் படித்து தலையில்  அடித்துக்கொள்ளத்தான் தோன்றியது!
- ‘மீசை’ எஸ்.மூர்த்தி, மஞ்சக்குப்பம்.