பொறுப்பு



பிரபல வங்கி வாசலில் நின்றுகொண்டிருந்தான் ராஜபாண்டி.
‘‘என்னடா இங்கே..? பேங்க்ல ஏதாச்சும் வேலையா?’’ - அந்தப் பக்கம் வந்த நண்பன் முனீஸ்குமார் கேட்டான்.
‘‘இல்லேடா... வீட்ல எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க. இங்கதான் கேஷியரா வேலை பார்க்கிறாளாம். அவளைப் பார்த்துட்டுப்  போகலாம்னு வந்தா, எனக்கு இந்த பேங்க்ல அக்கவுன்ட் இல்ல. எப்படி உள்ள போறதுன்னு யோசிச்சிட்டு நிற்கிறேன்!’’ என்றான்  ராஜபாண்டி.
‘‘ரொம்ப சிம்பிள். நான் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைத் தர்றேன். நீ அந்தப் பொண்ணுகிட்ட போய் சேஞ்ஜ் கேளு. கொடுத்தா நல்ல  மனசுக்காரி. அதிலேயே கேரக்டரைப் புரிஞ்சிக்கலாமே!’’ என்றான் முனீஸ்.



‘‘ஓகேடா’’ என்ற ராஜபாண்டி ஆயிரம் ரூபாய் நோட்டோடு உள்ளே போய் சிறிது நேரத்திலேயே சில்லறையோடு திரும்பினான்.
‘‘அப்போ பொண்ணு ஓகேதானே?’’
‘‘இல்லடா! ஆயிரம் ரூபாவுக்கு சேஞ்ஜ் கேட்டதுக்கு தவறுதலா ஆயிரத்தி நூறு ரூபா தந்துட்டா. கூடுதலா இருந்த நூறு ரூபாயை நான்தான்
திருப்பிக் கொடுத்துட்டு வந்துட்டேன். வேலை பார்க்குற இடத்துல தன் வேலையை பொறுப்பா நிர்வகிக்கத் தெரியாத பொண்ணு, நாளைக்கு  வீட்டுல குடும்பப் பொறுப்பை எப்படி நிர்வகிப்பா? அதான் பிடிக்கலைனு சொல்லிடப் போறேன்!’’ என்றான் ராஜபாண்டி முடிவாக!

ஜி.ராஜா