உயர சாகசம்





உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா முன்பாக பைக்கில் இப்படி தலைகீழாகப் பறந்து சாகசம் செய்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜோஷ் ஷீஹன். பைக் சாகசக் கலைஞர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின், பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை 50 கோடி ரூபாய். தாவ மாட்டார்களா பின்னே?