நம்பினால் நம்புங்கள்





‘Shrimp’  இன இறாலின் இதயம் அதன் தலையில் உள்ளது.

பண்டைய கிரேக்கத்தில் 200-க்கும் அதிக நடன வகைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

கேரள வீர விளையாட்டான ‘களரிப்பயட்டு’வில்
ஆயிரத்துக்கும் அதிக நுட்பங்கள் உள்ளன.

உலகில் அதிகம் விற்பனையாகும் முதல் 5 செய்தித்தாள்களும் ஜப்பானிலேயே வெளியாகின்றன.

14ம் நூற்றாண்டிலேயே நாணயம் சேகரிப்பது முக்கிய பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. இத்தாலிய கவிஞர் ஃப்ரான்செஸ்கோ பெட்ரார்கா சேகரித்த நாணயங்களிலிருந்து இது அறியப்படுகிறது. அதற்குப் பல நூறாண்டுகள் முன்பே ரோம் பேரரசர் அகஸ்டஸ் சீசர் வெளிநாட்டு நாணயங்களைச் சேகரித்து, பரிசாக வழங்கியதாக குறிப்புகள் உள்ளன!

மரம், கண்ணாடி ஃபைபர், கார்பன் ஃபைபர் ஆகிய பொருட்கள் கலந்தே ஹாக்கி மட்டை தயாரிக்கப்படுகிறது.

வௌவால்கள் 20-30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவ்வளவு சிறிய உயிரினம் இவ்வளவு நீண்ட காலம் வாழ்வது மிக அதிசயம்.

புவியியல் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் முதல் ஜிக்ஷா புதிர் விளையாட்டு. 1760-ல் ஜான் ஸ்பில்ஸ்பெர்ரி என்ற பிரிட்டிஷ் மேப் தயாரிப்பாளர் இதைத் தயாரித்தார்.

வின்சென்ட் வான் கா ஏறக்குறைய 900 ஓவியங்கள் வரைந்திருந்தாலும், ‘The Red Vineyard’   என்ற ஒரு ஓவியத்தை மட்டுமே அவரால் விற்க முடிந்தது.

கப்பல்களினால் ஏற்படும் வாயு மாசு காரணமாக மேகங்கள் சீர்குலைந்து, உலக வெப்பநிலையே மாறுதல் அடைகிறது.