டெலஸ்கோப் கார்!



பெரிய ஷாப்பிங் மால்கள், கூட்டங்கள், பார்க்கிங் ஏரியாக்களைக் கண்காணிக்கும் பணிக்காக ‘ஐரிஸ் விசியோ’ என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருக்கிறது பிரான்ஸ் நிறுவனம் ஒன்று.

ஒருவர் மட்டுமே செல்ல முடிகிற இந்தக் கார் மணிக்கு அதிகபட்சம் 25 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்தக் காரின் டிரைவர் இருக்கையை அப்படியே 10 அடி உயரத்துக்கு மேலே உயர்த்தலாம். அங்கிருந்தபடி டெலஸ்கோப்பில் டிரைவர் சுற்றிலும் கண்காணிக்கலாம்.