நம்பினால் நம்புங்கள்





*அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில்  Okay என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது. இங்கு 600 பேர் வசிக்கின்றனர்.

*செவ்வாய் கிரகத்தில் ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்ற எரிமலை உள்ளது. இதுவே சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை. எவரெஸ்ட் சிகரத்தை விடவும் கிட்டத்தட்ட மும்மடங்கு உயரம்... 22.5 கிலோமீட்டர்!

*2003ம் ஆண்டில் அங்கோலா நாட்டு ஏர்போர்ட்டில் இருந்து திருடப்பட்ட 727-223 போயிங் விமானம், இன்றுவரைகூட
கண்டறியப்படவில்லை.

*பூனைகளும் கனவு காணும். நாம் கனவு காண்கையில் மூளையில் ஏற்படும் அதே அலை அமைப்பே பூனைகளுக்கும்
ஏற்படுகிறது.

*அமேசான் மழைக்காடுகளிலேயே உலகின் 20 சதவீத ஆக்சிஜன் உருவாக்கப்படுகிறது.

*பட்டம் பெறாமலே வழக்குகளில் ஆஜராகி வந்தார் ஆப்ரகாம் லிங்கன். பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதற்கு 12 மாதங்களுக்கு முன்பே, அவர்  இடை நின்று விட்டார்.

*1980ம் ஆண்டிலிருந்து இதுவரை கலிஃபோர்னியா மாகாணத்தில் 23 சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. இதே காலகட்டத்தில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு கேம்பஸ்தான் உருவாக்கப்பட்டது.

*இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது, நிதியமைச்சர் மட்டும் மது அருந்தலாம்!

*இத்தாலியில் 2008ம் ஆண்டு நடைபெற்ற திராட்சை திருவிழாவின்போது, பல வீடுகளின் குடிநீர்க் குழாய்களில் ஒயின் கொட்டியது. தொழில்நுட்பக் கோளாறே காரணம்!

*37 சதவீத அமெரிக்கர்கள் ‘புவி வெப்பநிலை உயர்வு’ என்பது ஓர் ஏமாற்று வேலை என்றே நம்புகின்றனர்.