விமானத்தில் பயணிக்கும்போது ஜெட் லாக் ஏன் ஏற்படுகிறது?



ஏன்?எதற்கு?எப்படி?

ஜெட் லாக் என்பது நம் உடலின் உயிரியல் கடிகாரத்தோடு பகல், இரவு ஆகிய காலச் சூழல்கள் பொருந்தாதபோது ஏற்படும் நிலை. இதன் விளைவாக உடல் உறக்கமிழந்து களைப்படையும். விமானத்தில் பல்வேறு காலமண்டலத்திற்கிடையே பறக்கும்போது ஜெட்லாக் ஏற்படும். லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் எட்டு நேரமண்டலங்கள் இடையில் வருவதால், உடல் அதனைபுரிந்துகொள்ள முயன்று தடுமாறும்.

இங்கிலாந்து டூ தென் அமெரிக்கா செல்லும்போது நேர வித்தியாசம் இல்லை என்பதால் ஜெட்லாக் ஏற்படுவதில்லை.  மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்கள்,  விலங்குகள், பாக்டீரியாக் களுக்கும் கூட உயிரியல் கடி காரம் உண்டு. சிலருக்கு ஜெட்லாக் தாக்குதல் தீவிரமாக இருப்பதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Mr.ரோனி