எலினா லூகாஸ்



தலைவன் இவன் ஒருவன் 22

அமெரிக்காவைச்  சேர்ந்த தொழில்முனைவோரான எலினா லூகாஸ், யுடிலிட்டி API நிறுவனத்தை தொடங்கி, பெண்களுக்காக வேலைவாய்ப்புகளை அளித்து  சூழலைக்  காக்க  உழைத்து “எங்கள் பகுதி யிலேயே நாங்கள் மற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபடுவது பெண் பணியாளர்கள் விஷயத்தில்தான். உயர்பதவி களில்  பெண்களை அமர்த்தியிருக்கும் முடிவை  பெருமையானதாகவே நினைக்கிறேன்”  என்கிறார் எலினா.

2014 ஆம்  ஆண்டு துணை நிறுவனராக யுடிலிட்டி API  தொடங்கியவர் சோலார் பேனல்களின் விலையை 5%  மாக  குறைத்துள்ளார். “புதுப்பிக்கும் ஆற்றலைக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே   எனது லட்சியம்’’ எனும் இவரின் நம்பிக்கை பிளஸ் கணவர்  ஸ்காட்டின் ஆதரவோடு நிறுவனத்தை தொடங்கி வளர்த் திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு  லயோலா  பல்கலையில் பொலிட்டிகல் சயின்ஸ் பட்டப் படிப்பும், 2012 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பல் கலையில் பொருளாதாரப் பட்டமும் பெற்றுள்ளார் எலினா.  

ஃபார்ச்சூன்  இதழில்  ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தவர், தன் ஸ்டார்ட்  அப் ஆசையால்  அப்பணியை விட்டு விலகினார்.  “புதுப்பிக்கும்  ஆற்றல்  துறையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று  நினைத்தேன்.  அரசியல்  நிரம்பிய சூழலில் பணிபுரிந்து கடுையான மனச் சோர்வு  மற்றும் விரக்திக்குச் சென்றபின்னரே துறை மாறி  பணிபுரிய விரும்பினேன்”  என எலினா பேசும் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கிறது.

Women 2.0  என்ற ஸ்டார்ட்அப் நிகழ்வில் கலந்துகொண்டவருக்கு, அங்கு கேட்ட பேச்சுகள் உற்சாக  உத்வேகம்  தர, அங்கு பழகிய  நண்பரான  டேனியலுடன்   சேர்ந்து  கீன் காசா  என்ற ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார் எலினா.  “கற்பது,  கற்றுக்கொள்வது   எனத்தொடங்கிய வேலையில் கணவர் ஸ்காட், டேனியல் ஆகியோர்  பெரும் உதவியாக  இருந்தார்கள்.

புதிய  ஸ்டார்ட்  அப் தொடங்க புதிய மனிதர்களின் நட்பு தேவை. சிறிய செயல்களை முயற்சித்து,  தவறுகளை சரிசெய்தால் வளர்ச்சி நிச்சயம்” என்கிறார் எலினா.  தன் பெயரில் இணையதளத்தை தொடங்கி புதுப்பிக்கும் ஆற்றல், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகிய விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்கியது பலரது நட்பையும்  தொடர்புகளையும்  அதிகரித்தது  இதில் முக்கியமான பாய்ண்ட்.