நாசாவின் புதிய டயர்!



நாசாவின் எஞ்சினியர்கள் கல்லும் முள்ளும் கொட்டிக்கிடக்கும் வேற்று கோள்களின் ரஃப் பரப்புக்கு ஏற்ற புதிய டயரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்பிரிங்குகளைக் கொண்ட இரும்பு டயர்கள் இவை.  இதில்  இரும்புக்கு பதில்  நிக்கல்-டைட்டானிய  மிக்ஸ்  கலந்துள்ளது. அலாய் டயர்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு வடிவம் மாறுவது தற்காலிகம்தான்.

உடனே தன் இயல்பான வடிவத்திற்கு  மாறிவிடும் என்பதால்  இதற்கு  மெமரி அலாய் என்று பெயர். பங்க்ச்சர் அற்ற டயர்களான  இவை எதிர்காலத்தில்  இன்னும்  பல்வேறு புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்செலின், தற்போது  3டி டயர்களை தயாரிக்கும் முயற்சியில்  உள்ளது.