அகதி முஸ்லீம்கள்!



ஐரோப்பிய நாடுகளில் அகதி முஸ்லீம்களின் எண்ணிக்கை  மும்மடங்கு  (6.3%- 16.7% ) பெருகியுள்ளதாக ஆய்வுகளில்  தெரியவந்திருக்கிறது. ஜெர்மனி அரசு,  அகதிகளை  நமஸ்தே சொல்லி  வரவேற்பதால் 2050 ஆம்  ஆண்டில் 19.7%  முஸ்லீம்கள்  நாட்டின் சொத்தாக இருப்பார்கள் என்கிறது  அமெரிக்காவின் வாஷிங் டனைச் சேர்ந்த Pew நிறுவனத்தின் ஆய்வறிக்கை.

ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளிலும் 2016 ஆம் ஆண்டில் அகதியாக உள் நுழைந்த  முஸ்லீம்களின் விகிதம் 4.9% (25.8 மில்லியன்). 2010 இல் இந்த எண்ணிக்கை 19.5 மில்லியன். 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரியா, இராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மக்கள்  ஐரோப்பிய  நாடுகளுக்கு உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயரத் தொடங்கினர். சைப்ரஸ் (25.4%), பிரான்ஸ் (12.7%), ஸ்வீடன்(20.5%),பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெயரும் அகதிகளின் சொர்க்கமாக மாறிவருகின்றன.