வலிமையான சிமெண்ட்!



ஜெர்மனியைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வலிமையான சிமெண்ட்டை உருவாக்கியுள்ளனர். இதன் வடிவமைப்புக்கு மூலாதாரம், கடல் முள்ளெலியின் எலும்பு என்றால் நம்புவீர்களா?

முள்ளெலியின் உடலில் எலும்புகளில் அபரிமிதமாக உள்ள கால்சியம் கார்பனேட், அதன் உடலில் ஏற்படும் கீறல்கள் உள்ளிட்ட பாதிப்புகளை விரைவில் சரி செய்துகொள்கிறது.

உடையும் தன்மையற்ற எலும்புகளின் தன்மையை அப்படியே சிமெண்டுக்கு மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. “தற்போது நாங்கள் கண்டறிந்துள்ள சிமெண்ட் இதுவரை உருவாக்கப்பட்ட சிமெண்டுகளிலேயே அதிக வலிமை கொண்டது. 40-100%  அதிக வலு கொண்டது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெல்முட் கோல்ஃபன்.