திடீர் ரசம்



என்னென்ன தேவை?

அரைக்க... 

தக்காளி - 2,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
உப்பு - 1 1/2 டீஸ்பூன்.

தாளிக்க...

பொடியாக அரிந்த பூண்டு - 2 பல்,
நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

பொடியாக அரிந்த கொத்தமல்லி - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரைத்த விழுதில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்து, பொடியாக அரிந்த பூண்டு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். கொத்தமல்லி இலைகளுடன் தாளித்ததை ரசத்தில் சேர்த்து மூடி வைக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும் அல்லது சூப் போலவும் பருகலாம்.