தக்காளி குருமா



என்னென்ன தேவை?

தக்காளி - 3,
வெங்காயம் - 1,
சோம்பு - 1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1 கப்,
பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

கொர கொரப்பாக அரைக்க...

பூண்டு - 2 பல்,
இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

தாளிக்க...

சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
கிராம்பு - 2, பட்டை - 1,
கறிவேப்பிலை - 6 இலைகள்,
உளுந்தம் பருப்பு - 1  டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

ஒரு நான்-ஸ்டிக் கடாயில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெயை காய வைத்து கொர கொரப்பாக அரைத்த விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்தக் கலவையை ஆற வைத்து சோம்பு, தேங்காய்த் துருவல்,
பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். ஒரு கடாயில் மீதமுள்ள2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்க வைத்துள்ள பொருட்களை பொன்னிறமாகும் வரை வறுத்து அத்துடன் அரைத்த கலவையைச் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இட்லி / தோசைகளுடன் பரிமாற சுவையான தக்காளி குருமா தயார்.