ஸ்ப்ரவுட்ஸ் சட்னி



என்னென்ன தேவை?

முளைவிட்ட பயறு - 1 கப்,
பூண்டு - 2 அல்லது 3 பல்,
உப்பு - 3/4 டீஸ்பூன்,
புளி - 1/4 எலுமிச்சை அளவு,
இஞ்சி - 1 இஞ்ச் துண்டு,
வெங்காயம் - 1,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்.

வறுத்து, பொடிக்க...

உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10,
காய்ந்த மிளகாய் - 4.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டுப் பற்களை நிறம் மாறும் வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் முளைவிட்ட பயறு சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும். ஆறியவுடன் அதில் இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்ததும் அத்துடன் வறுத்து, பொடித்ததைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுக்கவும். தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சுவையான ஆரோக்கியமான சட்னி தயார்.