சாக்லெட் டோஸ்ட்



என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
பால் - 200 மி.லி.,
கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை 5 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் - 4 டீஸ்பூன் (ஒரு ஸ்லைஸுக்கு ஒரு டீஸ்பூன்).

எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் மிதமான சூடுள்ள பால், கோகோ பவுடர், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒவ்வொரு பிரெட் துண்டாக இந்தப் பாலில் முக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து வாட்டி எடுக்கவும். சுவையான டிபன் தயார்.