பொரிச்ச கஞ்சி



என்னென்ன தேவை?

குழைய வடித்த சாதம் - 2 கப்,
நெய் - 2 அல்லது 3 டீஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் -  1/4 டீஸ்பூன்.

பொடியாக அரைக்க...


மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வடித்த சாதத்தை 1/2 முதல் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய்யை காய வைத்து, பெருங்காயத் தூள் மற்றும் பொடித்த பொடி சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். (நல்ல மணம் வரும் வரை.) அத்துடன் குழைய வைத்த அரிசிக்கஞ்சி, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.