சென்னா ரசம்



என்னென்ன தேவை?

தக்காளி - 2,
வேக வைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - 1கைப்பிடி,
கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1 அல்லது 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கியகொத்தமல்லி - 2 டீஸ்பூன்.

தாளிக்க...

நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 பல்,
கறிவேப்பிலை - சிறிது.

பொடியாக அரைக்க...

கறிவேப்பிலை - சிறிது,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்புச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும். வேக வைத்த வெள்ளைக் கொண்டைக்கடலையை நன்கு மசித்துக் கொள்ளவும்.  கொதிக்கும் ரசத்துடன் மசித்த வெள்ளைக் கொண்டைக்கடலை, பொடித்த பொடி, கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் சேர்த்து நுரைக்கும் வரை கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி எலுமிச்சைச்சாறு சேர்த்து மூடி வைக்கவும்.