உருளை ரைஸ்



என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 3,
உப்பு - 1 டீஸ்பூன்,
பாசுமதி அரிசி - 1 கப்,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன். 

தூள்கள்...

மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை ஒரு சொட்டு நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்குகளை துருவிக் கொள்ளவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து துருவிய உருளைக்கிழங்கு, தூள்கள், உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை வதக்கவும். (உருளைக்கிழங்கு மசிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்). வெந்த கலவை ஆறியபின் வடித்த சாதத்துடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கவும். அப்பளத்துடன் பரிமாறவும்.