பனீர் - சீஸ் ரோல்ஸ்



என்னென்ன தேவை?

பிரெட் - 6 ஸ்லைஸ்,
எண்ணெய் - தேவைக்கு.

ஃபில்லிங்குக்கு...

பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - 2,
துருவிய பனீர் - 1 1/2 கப்,
துருவிய சீஸ் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
உப்பு - 3/4 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் -3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
பால் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியனை தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஃபில்லிங்குக்கு தேவையான மற்ற பொருட்களை ஸ்ப்ரிங் ஆனியனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை கட் செய்து சப்பாத்திக்குத் தேய்ப்பது போல் நீளவாக்கில் தேய்க்கவும். 2 டீஸ்பூன் ஃபில்லிங்கை ஓர் ஓரத்தில் வைத்து ரோல் செய்து ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டிவிடவும். எல்லா பிரெட் துண்டுகளையும் இப்படி ரெடி செய்து காய்ந்த தோசைக்கல்லில்
எண்ணெய் சேர்த்து இருபுறமும் வாட்டி எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.