பிரெட் பேசன் டோஸ்ட்



என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கடலை மாவு - 1 கப்,
துருவிய கேரட் - 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 (சிறியது),
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒவ்வொரு பிரெட் துண்டையும் 2 முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும். கடலை மாவுடன் துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, அத்துடன் 1/2 அல்லது 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக இந்த மாவில் தோய்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும். தக்காளி கெட்ச்சப்புடன் பரிமாறவும்.