கடலை மாவு லட்டு



என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப்,
நெய் - 1/2 கப்,
பால் - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பாதாம் - 2  (நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்),
பொடித்த சர்க்கரை - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு சூடான கடாயில் நெய் உருகும் வரை சிறு தீயில் வைக்கவும். அதில் கடலை மாவு சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வறுக்கவும் (பச்சை வாசம் போகும் வரை). அடுப்பை அணைத்து, மாவுக் கலவையில் பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும். லேசாக ஆறியதும், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். நறுக்கிய பாதாம் சேர்த்துப் பரிமாறவும்.