மிளகு அவல்



என்னென்ன தேவை?

கெட்டியான அவல் - 2 கப்,
உப்பு - 1 1/4 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்.

கொர கொரப்பாக அரைக்க...

சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1 (இரண்டாகக் கிள்ளிக் கொள்ளவும்),
கறிவேப்பிலை - 10 இலைகள்,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அவலை 2, 3 முறை நன்கு தண்ணீரில் அலசி 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிக்கவும். ஊறிய அவலை உப்புடன் சேர்த்துப் பிரட்டவும். அதை கடாயில் சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து 5 அல்லது 7 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும் (நடுவில் ஓரிரு முறை கிளறிவிடவும்). பொடித்த கலவை, துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.