பிரிந்த காதல்Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                     ‘சிறந்த நடிகனை காட்டினால், மோசமான கணவனை உனக்கு காண்பிப்பேன். திறமையான நடிகையை காண்பித்தால், அவளது இன்னொரு முகத்தை உனக்கு காண்பிப்பேன்...’ அமெரிக்க நடிகர் டபிள்யூ சி.பீல்ட்ஸின் இந்த வார்த்தைகள், நயன்தாரா - பிரபுதேவா காதல் முறிந்ததாகச் சொல்லப்பட்டதும் சட்டென்று நினைவிற்கு வருகிறது.

நயன்தாரா - பிரபுதேவாவின் மூன்றரை வருட காதல் மூர்ச்சையான விஷயம், முதலில் லீக் ஆனது தெலுங்கு இன்டஸ்ட்ரியில். அங்குள்ள சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, நட்சத்திர கூட்டத்தோடு அமர்ந்திருந்தார். ஏற்கனவே, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ ஹிட்டானதால் எல்லா ஹீரோவும் நயன்தாராவை மேடையில் புகழ்ந்துகொண்டிருந்தார்கள்.

‘நயன், ரீ என்ட்ரி ஆக வேண்டும்’ என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென்று மைக் பிடித்த ஓளிப்பதிவாளர் ஒருவர், ‘விடுங்க பாஸ்... நயன்தாரா கண்டிப்பா நடிப்பார்’ என்று ஸ்ட்ராங்காக சொல்லிவிட்டு இறங்க, அவரையும் நயன்தாராவையும் மொத்த ஹீரோக்களும் மொய்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அப்போதுதான் காதல் டமாரான விஷயம், டோலிவுட் வட்டாரத்துக்கு விவரிக்கப்பட்டது. சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியில் நிமிடங்கள் கரைய... ‘நயன்தாராவை நாமதான் அரவணைக்கணும்’ என்று அடுத்தடுத்து மின்னலை விட வேகமாக பலரும் பேச ஆரம்பித்தார்கள். அந்தப் பேச்சின் ஊடாக, ஆன் த ஸ்பாட்டில் முடிவு செய்யப்பட்டதுதான், நாகார்ஜுனா படத்தில் நயன் ஹீரோயின் என்ற விஷயம்.

முதலில் என்ன சொல்வவென்று தெரியாமல் முழித்த நயன்தாரா, பிறகு தலையாட்டிவிட்டு கொச்சிக்குப் பறந்துவிட்டார். அங்கிருந்துதான் தனது ஸ்டாராங்கான முடிவை வேண்டியவர்களின் மூலம் மீடியாவுக்கு அறிவித்தாராம்.

இனி தமிழ் - தெலுங்கில் நம்பர் ஒன் ரேஸில் குதிக்கப் போகிறார் நயன். தமிழில் எப்படியோ தெரியவில்லை. தெலுங்கில் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. பல ஹீரோக்கள், தங்கள் ஹீரோயின்களை மாற்றத் தொடங்க விட்டனர்.

இந்த காதல் முறிவுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் லாஜிக்கோடு சொல்கிற விஷயம், ‘நடிகையா இருக்கிறப்ப கிடைக்கிற பவர், புகழ், வீட்டுக்குள்ள மனைவியா இருந்தா கிடைக்குமா? புகழ்பெற்ற நடிகைகள் எல்லோருக்கும் இப்படியொரு தவிப்பு இருக்கும். அதுதான் நயன்தாராவுக்கும். அதனாலதான் இந்த முடிவை எடுத்தார். பிரபுதேவாவை பொறுத்தவரை நயன்தாரா நடிக்கக் கூடாதுனு உறுதியா இருந்தார். மற்றபடி இரண்டு பேர்கிட்டயும் பணம், புகழ் எல்லாமே இருக்கு. அதைதாண்டி என்ன வேணும்?’ என்கிறார்கள் இருவரையும் நன்கு தெரிந்தவர்கள்.

எது எப்படியோ, இருவரும் வாயைத் திறந்தால்தான் உண்மை தெரியவரும். அதுவரை ஆளாளுக்கு இச்செய்தியை மென்றுக் கொண்டிருக்கலாம்.
- நீனோ