பாரிVannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              ஜாலியாக பொழுதைக் கழிக்கும் நாயகனுக்கு, நாயகி மீது கண்டதும் காதல் பிறக்கிறது. சாதி வெறி பிடித்த நாயகனின் அப்பா மகனின் காதலியை கொலை செய்கிறார். காதலியைக் கொன்ற தந்தையை மகன் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

நாயகன் ராகுலுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். அதை சரியாக பயன்படுத்தியுள்ளார். நாயகி பீனா, அமைதியான நடிப்பில் பாஸாகிறார். அருள்தேவ் இசையில் ‘வந்தாயோ...’ பாடல் செவிக்கு விருந்து. முதல் பாதியில் பொறுமையைச் சோதிக்கும் இயக்குநர் ரஜினி, இரண்டாம் பாதியில் நெகிழ்வான கிளைமாக்ஸால் வியக்க வைக்கிறார்.