மீண்டும் மீனாVannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         இயக்குநர் பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணிக்கு நன்றாகப் பாடவும் தெரியும். இதையறிந்த பேரரசு, தான் எழுதி இசையமைக்கும் ‘திருத்தணி’ படத்தில், ‘வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை...’ பாடலைப் பாட வைத்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீகாந்த் தேவா, தான் இசையமைக்கும் ‘இவனும் பணக்காரன்’ படத்தில், ‘அண்டாகா கசம்...’ பாடலைப் பாட வைத்து, தொடர்ந்து வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

சாந்தனு ஜோடியாக ‘கண்டேன்’ படத்தில் நடித்துள்ள ரேஷ்மி கவுதம், ‘தேநீர் விடுதி’யில் நடித்த ரேஷ்மி மேனன் இருந்தாலும் தன் பெயரை மாற்ற மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவருக்கு தமிழ் தெரியாததால், அடுத்த தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாவதற்குள், தமிழில் தெளிவாகப் பேச பயிற்சி பெற்று வருகிறார்.

தன் மகள் நைனிகாவுக்கு ஒரு வருடம் நிறைவானதை தொடர்ந்து, மீண்டும் நடிக்க வருகிறார் மீனா. இதற்காக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு மெகா தொடர் வாய்ப்பு வந்தது. ஒருநாள் சம்பளமாக 50ல் இருந்து 60க்குள் கேட்டிருக்கிறார். அதாவது, ஆயிரத்தில்.
- தேவராஜ்