வசன சாரதி



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                     ‘காத்தடிக்கலடா... புயலடிக்குது...’ இது, ‘வேட்டை’யில் மாதவன் பேசும் டயலாக். இப்படி மணியான வார்த்தைகளில் ரத்தினமாக சொற்களை கோர்த்து கொடுத்தவர், பிருந்தா சாரதி.

‘‘ஒரே கல்லூரியில்தான் நானும் லிங்குசாமியையும் படித்தோம். நான் சீனியர். அவர் ஜூனியர். ஆனால், நல்ல நண்பர்கள். அதனால்தான் சினிமா ஆசையில் இருவரும் சென்னைக்கு வந்தபோது, ஒரே அறையில் தங்க முடிந்தது. இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் ஒரே கால கட்டத்தில் வேலை பார்த்தோம். லிங்குசாமி ‘ஆனந் தம்’ படத்தின் மூலம் இயக்குநரானபோது, என்னை வசனகர்த்தாவாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார்.

ஜீவாவை வைத்து நான் தனியாக ‘தித்திக்குதே’ படத்தை இயக்கினேன். ஓரளவு வெற்றி பெற்ற அப்படத்தை அடுத்து வேறொரு படத்தை இயக்க ஆரம்பித்தேன். சில காரணங்களால், அந்தப் படம் பாதியில் நின்று விட்டது. அப்போது லிங்குசாமி தான் ‘பையா’ படத்துக்கு வசனம் எழுதச் சொல்லி என்னை தூக்கி விட்டார். இதோ, இப்போது ‘வேட்டை’.

ஒரு வசனகர்த்தாவின் வேலை கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், கதையில் மூழ்கி வசனத்தை எடுப்பது  தான். கதையின் அடிப்படை விஷயங்களை ரசிகர்களுக்கு வசனம் வழியாகவே புரிய வைக்க முடியும். கமர்ஷியல் படங்களிலும் கவித்துவமாக வசனம் எழுத முடியும் என்பது என் நம்பிக்கை. ‘வேட்டை’க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் லிங்குசாமிதான்...’’ என்கிறார் பிருந்தா சாரதி.
- சுரேஷ் ராஜா