அமிதாப் படத்தில் ரஜினிVannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ஓரிரு படங்களிலேயே நடிப்பதால் பேத்தியுடன் விளையாடவும், டிவிட்டரிலும் ப்ளாக்கிலும் எழுதவும் நேரம் கிடைக்கிறது என அமிதாப் சந்தோஷப்படுகிறார்.

‘பர்பி’ படத்தில் நீச்சல் உடையில், தான் நடிக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக அனைத்து நிருபர்களையும் தேடித் தேடி சொல்கிறார் இலியானா.

ஆசை ஆசையாக கட்டியுள்ள புது வீட்டுக்கு குடிபோயிருக்கிறார் சமீரா ரெட்டி.

நல்ல மனைவியாகவும், சீராட்டும் தாயாகவும் இருக்கும் கஜோல், கிடைக்கும் நேரங்களில் தன் கணவர் அஜய் தேவகன் தயாரிக்கும் படத்துக்காக கதை எழுதி வருகிறார்.

‘ஜிஸ்ம் 2’ படத¢தில் நடிக்கும் ஷெர்லின் சோப்ரா, தன் கதாபாத்திரம் குறித்து பேச மறுக்கிறார். ஆனால், ‘அந்தப் படம் நிச்சயம் தனக்கொரு பிரேக் தரும்’ என்கிறார்.

பார்ட்டி ஒன்றில் தனது செல்போனை தொலைத்து விட்டாராம் நேஹா துபியா. எனவே நெருக்கமான நண்பர்களின் எண் தெரியாமல் திண்டாடுகிறார்.

‘ரன்தீப்புடன் இப்போதைக்கு திருமணம் இல்லை’ என்று நீது சந்திரா அறிவித்திருப்பதால், அவர்களது காதல் முறிந்துவிட்டது என்கிறார்கள்.

‘கிரிஷ் 3’ படத்துக்காக நீண்ட தலைமுடியை வளர்க்கும் ஹிரித்திக், ‘இந்தப் படத்தை நான் இயக்கி வருவதாக வரும் தகவல் பொய்யானது’ என்கிறார்.

அமிதாப்பும், ரஜினியும் இணைந்து நடிக்கும் படத்துக்கான கதையை, தான், உருவாக்கியிருப்பதாக பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் பூரி ஜெகன்னாத். இதற்கு ரஜினியும் ஒப்புதல் அளித்திருக்கிறாராம்.

எந்த நாட்டுக்கு சென்றாலும், அந்த நாட்டில் பிரபலமாக இருக்கும் பெர்பியூம்களை வாங்கிவிடுவார் கேத்ரினா. இதனால் அவரது வீடே மணக்கிறது.

‘குஸர் பிரசாத் க பூத்’ படத்தில் பேயாக நடிக்கிறார் பரேஷ் ராவல்.

மாதத்தில் 4 விளம்பர படங்களையாவது இயக்கி வ¤டுகிறார் பிரியதர்ஷன். இதனால் மற்ற இயக்குநர்கள் அவரை பொறாமையுடன் பார்க்கிறார்கள்.
- ஜியா