அஞ்சு பன்ச்சுVannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       ஷூட்டிங் முடிந்ததும் தன் அறைக்குத் திரும்பி, திருநங்கைகள் திருஷ்டி கழித்த பிறகே, தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் செல்வார், நயன்தாரா. அப்போது, அவர்கள் எதிர்பாராத அளவுக்கு நயன்தாராவிடம் இருந்து ‘சன்மானம்’ கிடைக்கும்.

துபாயில் வசிக்கும் தன் அண்ணன் லினு குரியனின் மகள் ஏஞ்சலினா என்றால், நயன்தாராவுக்கு உயிர். அந்தக் குழந்தைக்கும் அத்தையின் மீது கொள்ளைப்பிரியம். அடிக்கடி நயன்தாரா துபாய் செல்ல காரணம், ஏஞ்சலினாவை அள்ளிக் கொஞ்சவும், அவளை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்லவும்தான்.

ஒரு ஷூட்டிங்கில் நடன இயக்குநர் பிருந்தா, நடன மங்கைகளைப் பார்த்து, ‘கேர்ள்ஸ்... நயன்தாரா மாதிரி இருங்க. அவங்களை நம்பி, காலையில் ஒன்பது மணிக்கு கேமராவை ஸ்டார்ட் பண்ணலாம். ரொம்ப ஷார்ப்பா கேமரா முன்னால் நிற்பாங்க’ என்று, நயன்தாரா இல்லாத இடத்தில் அவரது பெயரைச் சொல்லி பாராட்டியிருக்கிறார்.

செய்த உதவியை வெளியே சொன்னால், உதவியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட நயன்தாரா, புரொடக்ஷன் மேனேஜர்கள் சிலருக்கு மிகப் பெரிய உதவிகளைச் செய்திருக்கிறார்.

எந்த ஹீரோயின் சிறப்பாக நடித்தாலும், அவரது செல்போன் நம்பர் வாங்கி பேசுவார், பாராட்டுவார். ‘பருத்தி வீரன்’ பார்த்துவிட்டு, பிரியாமணிக்கு போன் செய்து, ‘உங்க நடிப்புக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும்’ என்றார். அதன்படி கிடைத்தது. இப்போது அமலா பாலை தொடர்புகொண்டு, ‘நீ பிரியங்கா சோப்ரா மாதிரியே இருக்க’ என்று பாராட்டியுள்ளார்.
- தேவராஜ்