நெடுஞ்சாலை



தனக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்காக உயிரை பணயம் வைத்து ஓடும் லாரியில் திருடுகிறார் ஆரி. அதே பகுதியில் ஓட்டல் தொழில் நடத்துகிறார் ஷிவதா. இருவரும் எதிரும் புதிருமாக உரசிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஷிவதாவின் மானம் கப்பல் ஏறும்போது ஆரி காப்பாற்றுகிறார். பிறகு ஒருவருக்காக ஒருவர் வாழ நினைக்கும் போது அவர்களை சமுதாயம் வாழ முடியாதளவுக்குத் துரத்துகிறது. காதலர்களின்  முடிவு சுபமா, சோகமா என்பது மீதிக்கதை.

தார்பாய் முருகன் கேரக்டரில் நடித்திருக்கும் ஆரி அந்தக் கேரக்டருக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது அவருடைய உடற்கட்டும், உடல் மொழியும் சொல்லாமல் சொல்கிறது. காதல் வந்த பிறகு பெட்டிப் பாம்பு போல் குழையும் போது நடிப்பின் உச்சத்தையும் தொடுகிறார். ஷிவதாவின் புகழ் சிறிது காலம் மங்காமல் இருப்பது உறுதி.

 இன்ஸ்பெக்டராக வரும் பிரசாத் நாராயணனின் நடிப்பும், குரலும் அபாரம். மாட்டு சேகராக வரும் மலையாள நடிகர் சலீம் குமார் தேசிய விருது வாங்கியவர். அந்த தகுதியை தக்கவைத்துக் கொண்டதற்காக ஸ்பெஷல் பாராட்டு. இசையமைப்பாளர் சத்யா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு யானை பலத்தை தருகிறது.

இரவுக் காட்சி களை ரம்மியமாக காண்பித்ததற்காகவே ஒளிப் பதிவாளர் ராஜ வேலுவைப் பாராட் டலாம். நாயகனுக்கு கொள்ளை அடிப் பதுதான் தொழில் என்று சொல்லும் இயக்குனர் அதை சொல்லியிருக்கும் விதத்தில் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிடுகிறார்.