வினியோகஸ்தர்கள் இனம் அழிந்துவிட்டதா?



தமிழ் சினிமாவின் சக்திமிக்க அமைப்பாக இருந்தது வினியோகஸ்தர்கள் சங்கம். சூப்பர் ஸ்டாருக்கே ரெட் கார்ட் போட்டு கலங்கடித்த அமைப்பு. வினியோகஸ்தர்கள் நினைப்பதுதான் சினிமா. மற்ற அமைப்புகள் அதற்குப் பின்னால்தான். இப்படி இருந்தது ஒரு காலத்தில். இப்போது என்ன ஆனார்கள் வினியோகஸ்தர்கள்? மீரான் சாகிப் தெருவோடு முடங்கிப்போனது ஏன்?

வினியோகஸ்தர்களில் புதிய படங்களை வாங்கித் திரையிடுவோர், ஷிப்டிங் படங்களைத் திரையிடுவோர், பழைய படங்களைத் திரை யிடுவோர், டப்பிங் படங்களைத் திரையிடுவோர் என 4 வகையினர் இருந்தார்கள்.

தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு பழைய படங்களை வினியோகிப்பவர்கள் தொழிலை கைவிட்டனர். முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒரு படம் 100 தியேட்டர்களில் திரை யிடப்படுவதே பெரிய செய்தி. இப்போது மீடியம் பட்ஜெட் படமாக இருந்தாலும் குறைந்தது 250 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதனால் ஷிப்டிங் படங்களுக்கு தியேட்டரும் கிடைப்பதில்லை. ஷிப்டிங்கிற்கான அவசியமும் ஏற்படவில்லை. புதிய படங்களின் வியாபார மதிப்பு கோடிக்கணக்கில் ஆகிவிட்டதால் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வினியோகஸ்தர்கள் இல்லை.

இதனால் தயாரிப்பாளர்களே வினியோகஸ்தர் களாகிவிட்டார்கள். இப்படியான இந்த மூன்று வகை வினியோகஸ்தர்களும் மீரான் சாகிப் தெருவுக்குள்ளேயே முடங்கி விட்டார்கள். இதில் தப்பித்தவர்கள் டப்பிங் படங்களை வாங்கி வினியோகித்தவர்கள்தான். ஆங்கிலம், தெலுங்கு,  இந்தி டப்பிங் படங்களை வாங்கி வினியோகம் செய்கிறவர்கள் தொடர்ந்து அதை செய்து வருகிறார்கள்.

திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லையை மையமாகக் கொண்ட வினியோகஸ்தர்கள் மையத்தில் முன்பு 50 முதல் 100 வினியோகஸ்தர்கள் ஆக்டிவ்வாக இருந்தார்கள். இப்போது ஒரு சென்டருக்கு ஓரிருவர் மட்டுமே தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் பெரிய படத்தின் வியாபாரத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருக் கிறார்கள். மற்றவர்கள் தயாரிப்பாளர்களின், தியேட்டர் பிரதிநிதி களாகி விட்டார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம். இன்னும் சிலர் மீடியேட்டர் ஆகிவிட்டார்கள். மற்றவர்கள் தொழிலை விட்டுச் சென்றுவிட்டார்கள். என்றாலும் நாளைக்கு மாற்றம் வரலாம் என்ற நம்பிக்கையோடு தாங்கள் சார்ந்த சங்கங்களைத் தொய்வின்றி நடத்தி வருகிறார்கள்.

‘வினியோகஸ்தர்கள் இனமே அழிந்து விட்டது என்பது அதீத கற்பனை. காலத்திற்கேற்ப மாற்ற மடைந்திருக்கிறது என்று சொல்லலாம். பெரிய படங்களை வாங்கி வினியோகிக்கும் வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலப் படங்களை வாங்கி வினியோகிப்பவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களே வினியோகஸ்தர் களாகி வருகிறார்கள். முந்தைய காலத்தை ஒப்பிடும்போது இப்போது வினியோகஸ்தர்கள் அதிகமாக தொழில் செய்யவில்லை என்பது உண்மைதான்’ என்கிறார் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் செயலா ளர் கலைப்புலி ஜி.சேகரன்.

மீரான்